இன்று ஆஸ்திரேலியா தினம் (26/01/2012) ஆகும். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள மக்கள் எல்லோரும் தேசிய ரீதியாகக் வெகு சிறப்பாக ஆஸ்திரேலியா தினத்தைக் கொண்டாடுகின்றனர். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு உத்தியோகபூர்வமாக ஆஸ்திரேலிய அரசினரால் வழங்கப்படும் அதியுயர் விருதான இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் (Australian of the year) விருதை Queensland மாநிலத்தை சேர்ந்த மிகச் சிறந்த நடிகரான Mr.Geoffrey Rush பெறுகின்றார். இந்த விருது ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் தலைமைத்துவமிக்க கௌரவமான குடிமகனொருவருக்கு வருடம் தோறும் வழங்கப்படும் சிறப்பானதொரு விருதாகும்.
Australian of the year, Actor Geoffrey Rush with
Australian Prime Minister Hon Julia Gillard MP
Geoffrey Rush, அவர்கள் Shine என்ற ஆஸ்திரேலிய திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகருக்காக ஆஸ்கார், டொனி, எம்மி (Oscar, Tony, Emmy) ஆகிய மூன்று விருதுகளையும் 1997 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டவர்.
தெளிவான பளிங்கு நீலக்கடலால் சூழப்பட்ட, அழகான கடற்கரைகளும், தொன்மையான புராதனமிக்க
பாறைகளும், மழைவனக்காடுகளும்
நிறையப்பெற்ற இயற்கைவளமிக்க ஆஸ்திரேலிய நாட்டின் குடிமகனான
நானும் ஆஸ்திரேலிய தினத்தை இன்று விமரிசையாகக் கொண்டாடுகின்றேன்.
நிறையப்பெற்ற இயற்கைவளமிக்க ஆஸ்திரேலிய நாட்டின் குடிமகனான
நானும் ஆஸ்திரேலிய தினத்தை இன்று விமரிசையாகக் கொண்டாடுகின்றேன்.
எல்லோருக்கும் எனது அன்பு நிறைந்த ஆஸ்திரேலிய தின
வாழ்த்துக்கள்!!!!.
இணைப்புக்கள்
ஆஸ்திரேலியா தினவிபரங்கள்
http://www.australiaday.org.au/
விருதுகள் பற்றிய விபரங்கள்
http://www.australianoftheyear.org.au/
ஆஸ்திரேலியா தினவிபரங்கள்
http://www.australiaday.org.au/
விருதுகள் பற்றிய விபரங்கள்
http://www.australianoftheyear.org.au/
நடிகர் Geoffrey Rush அவர்களின் விபரங்கள்
No comments:
Post a Comment