Monday, January 31, 2011

பிரத்தியேகமாக ipad கணணியினிலே மட்டும் காணப்போகும் நாளிதழ்.

உலகத்தில் முதன்முறையாக ipad கணணியிலே மட்டுமே காணத்தகுந்த
முறையிலே வடிவமைக்கப்பட்ட நாளிதழான "The daily" பிப்ரவரி 2ஆம் திகதி
முதல் வெளிவருகின்றது. வாரத்திற்கு .99 US$ டொலர் சந்தா செலுத்தினால் ipad  கணணியிலே இந்நாளிதழைக் கண்டு வாசிக்கலாம்.
News corp நிறுவனத்தினர், ஆப்பிள் (Apple) கணணி நிறுவனத்தினரின் உதவியுடன் வெளியிடவிருக்கும் இந்நாளிதழ் வழமையான மற்ற நாளிதழ்களிலிருந்து எவ்வகையில் வேறுபட்டு தனித்தன்மையுடன் வாசகர்களைக் கவரப்போகின்றது? என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்ப்போமே.

இணைப்புக்கள்
செய்தியாக:
http://www.warwickdailynews.com.au/story/2011/01/28/news-corp-to-launch-ipad-newspaper/
http://money.cnn.com/2011/01/27/technology/ipad_the_daily/index.htm

இதுவரைக்கும் அறிந்தமட்டிலும் எதிர்பார்ப்பாக:
http://www.pcworld.com/article/211294/murdoch_and_jobs_ipadonly_news_app_what_we_know_so_far.html

செய்திகளைத் தந்தவர் சாதாரணன்.
மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.

Saturday, January 29, 2011

மழலைகளின் உணவில் அதிக கவனம் கட்டாயமாகத் தேவை.

மழலைகள் இலகுவாக தங்களுக்கு பிடித்தமான சுவையுடய உணவுகளை அடையாளம் கண்டுவிடுகிறார்களெனவும், அத்துடன் மழலைகள் அதீதமான
கொழுப்பு, உப்பு, இனிப்பு கொண்ட தீனிகளையே விரும்புவதாகவும் அமெரிக்காவில் அண்மையில் மழலைகளையும், பெற்றோர்களையும் உள்ளடக்கி நிகழ்ந்த பரிசோதனைகளுடன் கூடிய ஆய்வொன்றின் முடிவொன்று தெரிவித்துள்ளது.

இந்த ஆராய்ச்சிகளின் முடிவுகள் மிகுந்த கவலையளிப்பதாக இருந்தாலும் குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்ததிலிருந்தே பெற்றோர்கள் குழந்தைகளின்
உடல் நலத்திற்கேற்புடைய உணவுப் பதார்த்தங்களை அதிக அக்கறையுடன் கொடுக்கவேண்டுமென வலியுறுத்துகின்றது.

இணைப்புக்கள்
செய்தி
http://www.sfgate.com/cgi-bin/article.cgi?f=/g/a/2011/01/27/prweb8095251.DTL

சுருக்கமாக ஆய்வின் விபரங்கள்
http://www.laboratoryequipment.com/News-kids-fall-for-sugary-fatty-brands-012811.aspx

சில தீர்வுகள்
http://www.i-newswire.com/preschoolers-need-to-be-taught/86534

Friday, January 28, 2011

சாம்பலிருந்து மீண்டெழுந்து வந்த நிஜக் கதாநாயகன்!!

வெள்ள அழிவால் பாதிக்கப்பட்ட Qeensland மக்களுக்கு உதவிய குட்டிபையன் மீண்டும் ஆஸ்திரேலிய மக்களின் கவனத்தைக் கவர்ந்தான். இவன் இதற்கு முன்னரும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் கெவின் ருட்டினால்
'Pind sized Hero' என வர்ணிக்கப்பட்டதால் மக்களின் கவனத்திற்குள்ளானவன்.
2009ஆம் ஆண்டு விக்டோரியா மாநிலத்தில் காட்டுத்தீயினால் ஏற்பட்ட
பேரழிவினால் பாதிக்கப்பட்டு தனது தந்தையையும் இழந்த இந்த குட்டிப்பையன்  Bailey Lackas அப்போது கைகொடுத்த Queensland மக்களுக்குத்தானும் கைமாறு செய்யவேண்டும் என்ற முனைப்போடு தனது தாயாரோடு இணைந்து  வந்து தொண்டராக பணியாற்றவிருக்கின்றான்.

இணைப்புக்கள்
1.http://m.news.com.au/NationalNews/fi659491.htm

2.Pint-Sized Hero

செய்திகளைத் தந்தவர் சாதாரணன்.
மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.

Thursday, January 27, 2011

நம்ம ரஜினி படம் ரஸ்ய மொழியிலும் டப்பாகி இருக்கிறது.

இதற்கு முதல் தமிழ்ப்படம் வெறெதுவும் டப் பண்ணியிருக்காங்களா
என்று தெரியவில்லை. நம்ம ரஜினி படம் எந்திரனை ரஸ்ய மொழியில் டப் பண்ணியுள்ளார்கள். 
இந்தப் பெருமை தமிழ்திரைப்படத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு கிடைத்த உலக அங்கிகாரம் என மகிழ்ச்சியுடன் நாம் சந்தோஷம் கொள்ளலாம். அதுவும் தமிழில் வெளிவந்த விஞ்ஞானப் புனைவுத் திரைப்படம் என்பதால் இரட்டிப்பு சந்தொஷம். ஷங்கரின் பல வருடக் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

இணைப்புக்கள்
செய்தியாகவும்
http://theblemish.com/2011/01/robot-is-fairly-ridiculous-awesome/

கருத்துக்களாகவும்
http://www.reddit.com/r/funny/comments/f8wc6/best_action_scene_ever/

செய்திகளைத் தந்தவர் சாதாரணன்.
மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.

Wednesday, January 26, 2011

சி.சி.கா2: ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு விசேட வீடியோ காட்சிகள்

ஆஸ்திரேலியாவில் பிரபலமான சில பாடல் காட்சிகளை
ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு தந்துள்ளேன் முதலில்
ஆஸ்திரேலிய பழங்குடிமக்களின் இசைக்குழுவினர் yutho yindiயின்
பாடல்களில் பிரபல்யமானதொன்றைப் பாருங்களேன்.

ஆஸ்திரேலியாவில் இரசிகர்களின் ஏகோபித்த பாடகர் John Farnham அவர்களின்
You Are Voice பாடலை அடுத்ததாகத் தந்துள்ளேன்.  இது ஆஸ்திரேலியாவின் தேசியகீதம் என்று சொல்லப்படுமளவுக்கு பிரபல்யமானது. இரசிகர்களை தனது இசையால் மயக்கி பாடவும், ஆடவும் வைத்துவிடுவார். இவர் இசைத்துறையிலிருந்து ஓய்வெடுப்பதற்கு விரும்பினாலும் இரசிகர்கள் விடுவதாயில்லை.

மேலும் சில பாடல்களை அடுத்தடுத்த நாட்களில் தருகின்றேன்.

காட்சிகளைத் தந்தவர் சாதாரணன்.
மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.

ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!.

இன்று ஆஸ்திரேலியா தினம் ஆகும். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள மக்கள் எல்லோரும் தேசிய ரீதியாகக் வெகு சிறப்பாக ஆஸ்திரேலியா தினத்தைக்  கொண்டாடுகின்றனர். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும்
சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு உத்தியோகபூர்வமாக ஆஸ்திரேலிய
அரசினரால் வழங்கப்படும் அதியுயர் விருதான இவ்வருடத்திற்கான
ஆஸ்திரேலியன் (Australian of the year) விருதை விக்டோரியா மாநிலத்தை
சேர்ந்த வர்த்தகப் பிரமுகரும், சமூக சேவையாளருமான Mr.Simon McKeon பெறுகின்றார். இந்த விருது ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு முன்மாதிரியாகத்
திகழும் தலைமைத்துவமிக்க கௌரவமான குடிமகனொருவருக்கு வருடம்
தோறும் வழங்கப்படும் சிறப்பானதொரு விருதாகும்.

தெளிவான பளிங்கு நீலக்கடலால் சூழப்பட்ட, அழகான கடற்கரைகளும், தொன்மையான புராதனமிக்க பாறைகளும், மழைவனக்காடுகளும்
நிறையப்பெற்ற இயற்கைவளமிக்க ஆஸ்திரேலிய நாட்டின் குடிமகனான
நானும் ஆஸ்திரேலிய தினத்தை இன்று விமரிசையாகக் கொண்டாடுகின்றேன்.
எல்லோருக்கும் எனது அன்பு நிறைந்த ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!.
 
இணைப்புக்கள்
ஆஸ்திரேலியா தினவிபரங்கள்
http://www.australiaday.org.au/

விருதுகள் பற்றிய விபரங்கள்
http://www.australianoftheyear.org.au/

ஆஸ்திரேலியாவின் பன்முகத்தையும் இரசிக்க
http://www.australia.com/about/AboutAustralia.aspx
http://walkaboutplanner.australia.com/index.html#/trips/

Tuesday, January 25, 2011

உலகம் பஞ்சத்தை எதிர்கொள்ளாதிருக்க உடனடி நடவடிக்கை தேவை

பிரித்தானிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் பன்நாட்டு நிபுணர்கள்
குழுவினரால் கடந்த இருவருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்
முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையானது, இன்னும் இருபது வருடங்களில் உலகளவில் ஏற்படவிருக்கும் பஞ்சத்தை தடுப்பதற்கு உலக உணவுற்பத்தியில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய செயற்திட்டங்களுடனான உடனடி நடவடிக்கைகள் தேவையென வற்புறுத்தியுள்ளது.
மேலும் இவ்வறிக்கையில் இப்பஞ்சத்தை ஏற்படுத்தவிருக்கும் முக்கிய
காரணிகளாக உலக சனத்தொகை அதிகரிப்பும், மக்கள் நகரங்களை நோக்கி முண்டியடித்துக்கொண்டு குடியேறுவதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இக்காரணிகளினால் உலக மக்களின் அத்தியாவசிய தேவைகளான உணவு, குடிதண்ணீர், மற்றும் சக்தி போன்றவைகளின் வழங்கலில் ஏற்படப்போகும் பற்றாக்குறை, இப்பஞ்சத்தை உண்டாக்குமென நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
   
இருபது வருடங்களின் பின்னர்தானே எனப்பொறுத்திருக்காமல் உடனடியாக உலகநாடுகளுக்கிடையேயில் ஒருங்கிணைந்த செயற்திட்டங்கள் உலகளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளனர். முக்கியமாக உணவு வீணாவதை தடுக்கக்கூடிய, மற்றும் சிறியளவிலான உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் பெரியளவில் அறுவடையை பெற்றுக்கொள்ளக்கூடிய, வழிமுறைகள் கண்டறியப்பட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இணைப்புக்கள்
புள்ளிவிபரங்களுடனான செய்திகளை இங்கு காணலாம்.
http://www.dailymail.co.uk/sciencetech/article-1350009/Food-prices-rocket-50-global-hunger-epidemic-takes-hold.html
http://www.greenwisebusiness.co.uk/news/report-warns-of-food-shortages-without-urgent-action-2060.aspx

Sunday, January 23, 2011

விமானத்தில் இலத்திரனியல் கருவிகளை செயற்படுத்துவது மிகவும் ஆபத்தானது.

விமானப்பயணத்தின் ஆரம்பத்தில் இலத்திரனியல் கருவிகளின் செயற்பாடுகளை முற்றிலுமாக நிறுத்திவிடுமாறு விடுக்கப்படும் அறிவித்தலை பலரும் இது ஒரு வழக்கமான விஷயம்தானே என்று கவனதில் கொள்ளுவதேயில்லை. ஆனால் சமீபத்தில் நடந்த விசாரணையொன்று விமானப்பயணத்தின்போது பயணிகளின் இலத்திரனியல் கருவிகள் இடையூறுகளை உண்டாக்குவதாகக் கண்டறிந்துள்ளார்கள்.
மேலும் இது சில விமான விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக 2003ஆம் ஆண்டு நியூஸிலாந்தில்  நிகழ்ந்த எட்டுபேரை பலிகொண்ட விமான விபத்திற்கு மோபைல்போன்  இனால் ஏற்பட்ட இடையூறுதான் காரணமென நம்பப்படுகிறது.

எனவே விமானப் பயணத்தின்போது இலத்திரனியல் கருவிகள் உபயோகிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிடுங்கள்.
இணைப்புக்கள்
http://www.nytimes.com/2011/01/18/business/18devices.html
http://www.heraldsun.com.au/ipad/high-tech-danger-in-the-air/story-fn6bfmgc-1225991279563

Saturday, January 22, 2011

ஏன்னா நான் உன் நண்பேண்டா!!

இது காலம் கடந்த உறவு ஏன்னா நான் உன் நண்பேண்டா!! என்று சில வேளைகளில் விளையாட்டாக்கூட சொல்வோமல்லவா?  இனிமேல் அதை அழுத்தம் திருத்தமாக உணர்ச்சிபூர்வமாகவே நீங்கள் சொல்லலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞான பூர்வமாக கூறுகின்றார்கள். ஏனென்று பார்ப்போமா?
விஞ்ஞானிகள் ஏன் உங்களுக்கு சிலரை பார்த்தமாத்திரத்திலேயே பிடித்து விடுகின்றது என்றால் உங்களில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட ஜீன் இதில் சம்பத்தப்பட்டிருக்கிறது என்றும், அதேபோல் நீங்கள் கண்டமாத்திரதிலேயே வெறுப்பதிலும் வேறோரு குறிப்பிட்ட ஜீன் சம்பத்தபட்டிருக்கிறது என்கிறார்கள்.
இப்ப சொல்லுங்கோ உங்கள் நட்பு காலம் கடந்ததா இல்லையா?

இந்தப்பாடலைப் பார்த்துவிட்டுப் பின்னர் இணைப்புக்களில் விபரங்களைப் பாருங்களேன்.

இணைப்புக்கள்
http://www.bbc.co.uk/news/science-environment-12207954
http://news2.onlinenigeria.com/world/69652-Best-friends-forever-gene-Its-all-our-DNA-say-scientists.html

Friday, January 21, 2011

கல்லறையிலிருந்து கருவறைக்கு

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட உயிரினம் ஒன்று உயிருடன் உங்கள் முன்னால் உலா வரப்போகின்றது என்றால் நம்பமுடிகின்றதா? தற்போது ஜப்பானில் நடந்து வரும் ஆராய்ச்சி வெற்றியளிக்குமாயின் இன்னும் ஐந்து வருடங்களில் நிகழப்போகும் நிதர்சனம் இது.
 
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பனிக்கட்டிக் காலத்தில் ரஸ்யாவின் சைபீரிய வெளிகளில் வாழ்ந்த ஒருவகை யானையினம் பூமியில் ஏற்பட்ட திடீர் வெப்ப உயர்வால் முற்றிலுமாக அழிந்தது. இந்த உயிரினத்தைதான் மீண்டும் அதன் DNA மூலக்கூறுகளிலிருந்து உயிர்ப்பிக்கும் முயற்சியில் ஜப்பான் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.

மமூத் எனப்படும் இந்த உயிரினத்தின் செல்களின் DNA மூலக்கூறுகளை யானையின் வெற்றுக் கருமுட்டையினுள் செலுத்திப் பின்னர் பரிசோதனைச்சாலையில் சிலநாட்களுக்கு கருவை வளர்த்தெடுத்து யானையின் கருப்பையினுள் வைப்பதன் மூலம் உருவாகும் குட்டி முழுமைபெற குறைந்தது 600 நாட்களாவது எடுக்கும்.

இணைப்புக்கள்.
http://theweek.com/article/index/211207/cloning-the-woolly-mammoth-a-worrying-precedent

பழைய செய்தியெனினும் விரிவாக ஆராய்ந்துள்ளது.
http://news.nationalgeographic.com/news/2005/04/0408_050408_woollymammoth.html

Thursday, January 20, 2011

சிசிகா: நரேஷ்-ஐயரின் துள்ளல் ஜாலி

அதென்ன சிசிகா சிசிசெயல்லோ  என்பீர்கள். இந்தப் பதிவுபோல் இனிமேலும் அப்பபோ நான் கண்டு இரசிக்கும் காட்சிகளை தரலாம் என்றிருக்கின்றேன்.
இது வெள்ளோட்டம். சில சினிமாப் பாடல்களைக் கேட்டால் சினிமாக்காட்சி ஞாபகத்திற்கு வரும். இந்தகாட்சியை பார்த்தபின் இதுதான் ஞாபகத்திற்கு வரலாம்?

சின்னச் சின்னக் காட்சிகள்!
நரேஷ் ஐயர் மலையாளத் தொலக்காட்சியொன்றின் புதுவருட நடனவிருந்தில்
(stage show) கலக்கியிருக்கிறார் பாருங்களேன்.

இது உபரிதான் (போனஸ்). எப்போதும்போல சின்னச் சின்னச் செய்திகள் இருக்கும். நம்பிக்கையுடன் வாருங்கள். நாளை இரு செய்திகள்!!. (இன்று விட்டதையும் சேர்த்து)

காட்சிகளைத் தந்தவர் சாதாரணன்.
மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.

Wednesday, January 19, 2011

புலத்திலும் புகழுடன் திகழப்போகும் தமிழ்ப்படம்.

கோடம்பாக்கத்தின் செட்டுக்களுக்குள் குதிரை ஓட்டிக்கொண்டு வீரவசனங்கள் பேசிய நம்ம ஹீரோக்கள், மதுரையின் சந்துபொந்துகளுக்குள் சேவல்களுடன் கதை பேசுமளவுக்கு  இயக்குனர்களின் செல்லப்பிள்ளைகள் ஆகிவிட்டார்கள். புலத்திலும் தமிழ்படத்தின் சாயலிருந்து விலகி சொந்தக்கதையைப் பேசியிருக்கிறது 1999.

தமிழ்ப்படத்தின் பொற்காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அது மிகையல்ல உண்மை. ஹீரோக்கள் விம்பங்களை உடைத்து சாதாரணர்களாக இயக்குனர்களின் தயவில் வித்தியாசமான களங்களில் வாழத்தலைப்பட்டு விட்டார்கள். தொழில்நுட்பத்தினரும் சினிமாவின் எல்லாத் துறைகளிலும்  கொடிகட்டிப் பறக்கிறார்கள். தமிழ்படங்களுக்கு உலகத் திரைப்பட விழாக்களில் விருது என்பது ஆஸ்கார் உட்பட எட்டிய கனியாகிவிட்டது.

புலத்திலும் இதனை மெய்ப்பிக்கும் வண்ணம், சென்ற ஆண்டில் கனடாவில் வெளிவந்திருக்கும் படம்தான் 1999. இது பல உலகத் திரைப்பட விழாக்களிலும் பங்குகொண்டுள்ளதுடன் விருதுகளையும் பெற்றுள்ளது.



புலத்திலிருந்து இனிமேல் வரவிருக்கும் தமிழ்ப்படங்கள் உலகத் தரத்தையும் விஞ்சியிருக்கும் என்பதற்கு ஒரு நல்ல ஆரம்பம் 1999.



இணைப்புக்கள்

1.படத்தின் உத்தியோகபூர்வ வலைமனை
    http://www.1999movie.com/

2.இயக்குனரின் youtube பக்கம்
    www.youtube.com/user/leninmsivam

3.இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவு இயக்குனர்களின் பேட்டிகள்
    பகுதி1        பகுதி2        பகுதி3       பகுதி4         பகுதி5

4. படத்தின் கதைப் பின்னணியை உள்ளடக்கிய நல்லதொரு விமர்சனம்

 செய்திகளைத் தந்தவர் சாதாரணன்.
மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.

Monday, January 17, 2011

கிளுகிளுப்பில்லாத செக்ஸ் சமாச்சாரம்.

நீங்க நினைக்கிற மாதிரி ரொம்ப விவகாரமான விஷயம் இல்லைங்க. எதிர்பார்த்து வந்திடாந்திங்க. ஆனா உங்க அறிவுக்கு அவசியம் தேவையானதொன்றுங்க.  ஒண்ணுமே புரியலையா? அப்ப வந்துதான் பாருங்களேன். விஷயம் இதுதான்.

விண்வெளியில் பாலியல்

நாசா(மனிதன்), அடுத்தகட்ட ஆராய்ச்சிகளை சந்திரனிலும், செவ்வாயிலும் கொஞ்சம் காத்திரமாகவே நிகழ்த்தவிருப்பது தெரிந்ததே. அதற்கு முன்னோடியாக செவ்வாய்க்கான ஒரு வழிப்பயணத்திற்கு தன்னிச்சையாக முன்வரும் பயணிகளை திரட்டுவதையும் நீங்கள் அறிந்திருக்கலாம்.
இப்போது வேறொரு திசையிலும் நாசா ஆராய்ச்சிகளை முடுக்கிவிட்டுள்ளார்கள். அதுதாங்க, விண்வெளியில் பாலியல்.  (புவி)ஈர்ப்புவிசையில்லாத நிலையில் பாலுணர்வோடு கூடிய செயல்களுக்கான சாத்தியம், குழந்தைகள் உண்டாவதற்கான வாய்ப்புக்கள்,  பாலுணர்வோடு கூடிய செயற்பாடுகள் அவசியம்தான் என்ற  நிலையை உருவாக்கும் சூழ்நிலைகள், போன்றவை உள்ளிட்ட பல கோணங்களில் ஆராயவிருக்கிறார்கள்.

விசயத்தை காதிலை போட்டுட்டேன். இனி மேலும் தெரிஞ்சுக்கிறதுன்னா இணைப்புக்களில் போய்ப்பாருங்க. தலை சுத்துதா? இந்த பாட்டை கேட்டுட்டு போங்களேன்.
Naanrompaa.mp3

இணைப்புக்கள்
ரொம்ப விவரமா வேணும்னா இங்க பாருங்க.
http://www.aolnews.com/2011/01/14/sex-in-space-the-final-frontier/
http://blog.seattlepi.com/thebigblog/archives/235699.asp

விரிவாக ஆராய்ச்சிக்குரிய கேள்விகளுடனான கட்டுரை இங்கே.
http://journalofcosmology.com/Mars144.html

செய்திகளைத் தந்தவர் சாதாரணன்.
மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.

Saturday, January 15, 2011

வாழ்த்துச் செய்தியும் சின்னக் கவிதையும்.

எல்லோருக்கும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் வாழ்த்துகள், கூடவே தமிழ்ப்புத்தாண்டு வாழ்துக்களும் உரித்தாகட்டும். ஒரு சின்னக்கவிதை
கொஞ்சம் அவ்வையார், மிச்சம் நான்.


                                       வரப்புயர நீருயரும்.
                                       நீர் உயர நெல் உயரும்.
                                       நெல் உயர அறுவடை பெருகும்.
                                      அறுவடை பெருக உழவன் உயர்வான்.
                                       உழவன் உயர்ந்தால் உலகமே செழிக்கும்.

                                     அன்புடன்.
                                     சாதாரணன்.


இணைப்புக்கள்
உங்களுக்கும் குழந்தைகளுக்கும்.
http://en.wikipedia.org/wiki/Thai_Pongal
http://www.pongalfestival.org/pongal-festival.html

செய்திகளைத் தந்தவர் சாதாரணன்.
மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.

படங்களும் சேதிகள் சொல்லும்.

ஆஸ்திரேலியாவில் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதங்கள் அளவிடற்கரியது. வெள்ள அனர்த்தங்களோடு ஒட்டிய படங்களைப் பார்க்கும்போது அதை மேலும் ஆழமாகப் புரிந்து கொள்ளக் கூடியதாகவிருக்கிறது.



படங்கள் சொல்லாத சேதிகளையா நான் சொல்லிவிடப்போகின்றேன்.


இணைப்புக்கள்
மேலும் சில படங்கள்
Multimedia Interactive Herald Sun

நீங்கள் ஆஸ்திரேலியாவில் வசிப்பவரா? இவ்விணைப்பு உங்களுக்கு.
(மற்றவர்களும் பார்க்கலாம்).
http://www.google.com/crisisresponse/queensland_floods.html

நீங்களும் விரும்பினால் உதவலாம்.
http://www.qld.gov.au/floods/donate.html

செய்திகளைத் தந்தவர் சாதாரணன்.
மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம். 

Friday, January 14, 2011

அதிசயம் ஆனால் உண்மையா?

அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் ஒரு ஆற்றங்கரையில் புதிதாக தோன்றிய ஒருவர் எல்லோரையும் வியப்புக்குள்ளாகினார். அவர் வேறுயாருமல்ல ஒரு முதலையார்தான் வியப்புக்குள்ளாக்கினார். ஏனென்று கேட்கிறீர்களா?
ஆரஞ்சு வண்ணத்தில் ஒரு முதலை

தோன்றிய முதலை ஆரஞ்சு வண்ணத்திலிருந்ததுதான் பலரையும் வியப்புக்குள்ளாக்கியது. பொதுவாகவே அமைதியாக இருக்கும் ஆற்றங்கரை பரபரப்புக்குள்ளாகியது. எல்லோரின் பேச்சிலும் இதுதான் பேசுபொருள்.

இது இயற்கையில் தோன்றிய ஒருவகை இன முதலையா? என்ற அவர்களின் சந்தேகத்தை புளோரிடா நீர்வாழ் உயிரினங்களுக்கான அதிகார சபையினர் தீர்த்து வைத்தனர். இது இரும்பு ஒக்சைட் மாசுக்களாலுண்டான சாயக்கறை, அல்லது யாராவது வேடிக்கைக்காக தீந்தைப்பூச்சு அடித்திருக்கலாம் என்பதுதான்
அவர்களின் முடிபு.

எனினும் செய்தி புதினப்பத்திரிகை, தொலைக்காட்சி, வலைமனைக்கள், மற்றும் வலைப்பூக்கள் என களைகட்டிவிட்டது.
அவைகளுள் சின்னச் சின்னச் செய்திகளும் அடக்கம்.


இணைப்புக்கள்
 http://latimesblogs.latimes.com/unleashed/2011/01/orange-alligator-florida.html

http://www.mysuncoast.com/news/local/story/Orange-alligator-turns-heads-in-Venice/rc1skCKqYk2UpHFVqvCbIA.cspx

செய்திகளைத் தந்தவர் சாதாரணன்.
மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம். 

Thursday, January 13, 2011

இந்த வருடத்தின் சிறந்த கார்.

ஒவ்வொரு வருடமும் நோர்த் அமெரிக்காவில் இடம்பெறும் சர்வதேச ஆட்டோ மோபைல் கண்காட்சியில் அந்த வருடத்திற்கான சிறந்த காரை தெரிவு செய்து அறிவிப்பார்கள்.

இந்தத் தெரிவானது காரினுடைய நவீனத்தன்மை, அமைப்பு, பாதுகாப்பு செயற்பாடுகள், ஓட்டுனரின் திருப்தி, கையாளுவதற்குகந்த தன்மை, மற்றும் காரின் பெறுமதி முதற்கொண்டான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அமையும்.

இவ்வருடத்திற்குப் போட்டியிட்ட கார்களிலிருந்து இறுதித் தேர்வுக்கு வந்த
Chevrolet Volt, Nissan’s Leaf, மற்றும் Hyundai Sonata கார்களிலிருந்து சிறந்ததாக 
GM நிறுவனத்தினரின் Chevrolet Volt தெரிவு செய்யப்பட்டுள்ளது.


இணைப்புக்கள்
செய்தி விபரங்கள் இங்கே
http://www.msnbc.msn.com/id/40967274/ns/business-autos/

கண்காட்சி விபரங்கள் இங்கே
http://www.naias.com/the-2011-show/overview.aspx

செய்திகளைத் தந்தவர் சாதாரணன்.
மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.

Wednesday, January 12, 2011

புத்துயிர் பெறும் செய்மதித் தொடர்பு நிலையம்.

1962இல் ஆரம்பிக்கப்பட்டு ஒரு காலகட்டத்தில் உலகிலேயே மிகப்பெரிய செய்மதி தொடர்பு நிலையமாகவும் செயற்பட்டது Goonhilly Earth Station. இது 1969இல் சந்திரனில் மனிதன் காலடி வைத்த நேரத்திலும் முக்கிய பங்காற்றியது.  ஆனாலும் 2008இல் பெருமளவில் தனது செயற்பாடுகளை மட்டுப்படுத்திக்கொண்டதுடன் ஏறக்குறைய மூடிவிடும் நிலையை எட்டியிருந்தது.


இப்போது  ஒக்ஸ்போட் (Oxford) பல்கலைக்கழகம் உள்ளடங்கிய சில பிரித்தானிய, சர்வதேச விண்வெளி நிறுவனங்களின் கூட்டுமுயற்சியில் உருவான
Goonhilly Earth Station Ltd. (GES) என்ற பெயரில் மீண்டும் புத்துயிர் பெற்று முழுவீச்சுடன் செயற்படவிருக்கின்றது.

முதற்கட்டமாக மனிதன் சந்திரன், செவ்வாய் போன்ற கிரகங்களில் நிகழ்த்தவிருக்கும்  அடுத்தகட்ட விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு உறுதுணையாகவிருப்பதுடன்,
வானொலி வானியலின் (Radio Astronomy) துணைகொண்டு அறியப்படாத விஞ்ஞானப் புதிர்களான dark energy, quantum gravity தொடர்பான ஆராய்ச்சிகளிலும் ஈடுபடுத்திக் கொள்ளப்போகின்றது.
 
வளங்களை மீள உபயோகித்து மேலும் வளங்களை கண்டறிதல் என்றவகையிலும் முக்கியத்துவம் பெறும் இச்செயற்திட்டம் மனிதனின் தற்போதைய அறிவிற்கும் அப்பாற்பட்ட, உலக எல்லைகளை கடந்த விண்வெளியில் இதன் வீச்சம், எதிர்காலத்தில் பல சாதனைகளை நிச்சயமாக நிகழ்த்தும் என நாம் நம்பலாம்.


இணைப்புக்கள்
செய்தி தொடர்பான விளக்கமான விபரங்கள் இங்கும்
http://financial.tmcnet.com/news/2011/01/11/5237416.htm

செயற்பாடுகளை நிறுத்தியது பற்றிய செய்தி எனினும் அது கொண்டிருக்கும் செய்மதித்தொடர்பு வாங்கிகள் பற்றிய விபரங்கள் இங்குமுண்டு.
http://www.astroengine.com/2008/05/goonhilly-shutdown-of-the-worlds-largest-satellite-earth-station/

செய்திகளைத் தந்தவர் சாதாரணன்.
மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.

Tuesday, January 11, 2011

நல்ல மனங்கள் வாழ்க நாடு போற்ற வாழ்க

ஆஸ்திரேலியாவிலுள்ள Queensland  மாநிலத்தில் வரலாறு காணாத விதத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது உங்களுக்குத் சிலவேளை தெரிந்திருக்கலாம். அல்லாவிடின் இணைப்புக்களில் பார்க்கலாம். ஆனால் செய்தி அதுவல்ல.



இவ் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக ஆஸ்திரேலிய தொலைக்காட்சி நிறுவனங்களிலொன்றான சானல் 9 உம் மற்றும் சில நிறுவனங்களும் இணைந்து இருமணிநேர தெலிதோன் (telethon) நிதியுதவி நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியின் முதலொரு நிமிடத்தில் மட்டும் பன்னீராயிரம் (12000) நல்ல உள்ளங்கள் தொலைபேசி இணைப்பை ஏற்படுத்த முயற்சித்ததால் தொலைபெசிச்சேவை திணறி சில நிமிடங்களுக்குச் செயலிழந்தது. உலகில் நல்ல உள்ளத்துக்கு முன்னால் எதுவுமே பெரியதல்ல என்பதை நிரூபித்த இந்த நிகழ்வைத்தான் இன்றைய செய்தியாக உங்களுக்குத் தந்திருக்கின்றேன்.

அதன் பின்னரும் மனம் தளராத ஆஸ்திரேலிய மக்கள் அந்த இருமணி நேர நிகழ்ச்சியில் மட்டும் பதினொரு மில்லியன் டாலர்களை நிதியுதவியாக அளித்திருந்தனர். இந்த செய்தி தரும் தருணதில் மொத்தமாக 31,196,578 டாலர்கள் சேர்ந்துள்ளது.
            
"நல்ல மனங்கள் வாழ்க நாடு போற்ற வாழ்க"

இணைப்புக்கள்.
http://www.couriermail.com.au/news/deluge-of-donations-as-8m-in-pledges-pours-in-at-telethon-event-for-flood-victims/story-e6freon6-1225984674268

http://www.heraldsun.com.au/ipad/australia-digs-deep-for-flood-victims/story-fn6bfm6w-1225984688400

வெள்ளப்பெருக்குப் பற்றிய விபரங்களுக்கு:
http://en.wikipedia.org/wiki/2010%E2%80%932011_Queensland_floods

நீங்களும் விரும்பினால் உதவலாம்.
http://www.qld.gov.au/floods/donate.html

செய்திகளைத் தந்தவர் சாதாரணன்.

மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்

Monday, January 10, 2011

சந்திரனிலை இரும்பும் இருக்காம்!!!

நாஸா விஞ்ஞானிகள்  சந்திரனில் பூமியில் இருக்கும் அதே தரத்திலான இரும்புத்தாது இருப்பதாக அறிவித்துள்ளனர். முப்பது வருடங்களுக்கு முந்தி மேற்கொள்ளப்பட்ட விண்வெளிப்பயணங்களில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் நடத்திய ஆராய்ச்சிகளிலிருந்து இந்த முடிபுக்கு வந்துளனர். ஏற்கனவே சந்திரனில் தண்ணீர் இருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்திருந்தமை உங்களுக்குத் தெரிந்ததே. இந்த முடிபுகளும், இனிமேல் வரப்போகும் ஆராய்ச்சிகளின் முடிபுகளும் மனிதன் சந்திரனில் குடியேறப்போவதற்கு கட்டியம் கூறுவதாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.


போகிறபோக்கில் "எங்க உறவினரு ஒருத்தர் மூனுல ரொம்ப வசதியாக இருக்காரு, அங்கதான் இந்த holidayக்கு போகலாம்னு இருக்கோம்." என்று நாங்கள் சொல்லும் நாள் வெகுதொலைவில் இல்லைப்போலத்தான் தெரிகிறது.

விளக்கமான தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் காணலாம்
http://www.space.com/scienceastronomy/moon-core-apollo-data-110106.html
http://www.nasa.gov/home/hqnews/2011/jan/HQ_11-004_Moon_Core.html
http://www.space.com/scienceastronomy/moon-cabeus-crater-water-101021.html

உங்களுக்கு ஆர்வமிருப்பின் இந்த tweeterஇல் பின் தொடரின் நாஸாவிடமிருந்து இப்படியான பலதகவல்களை  பெற்றுக்கொள்ளலாம்.
http://twitter.com/nasa

இந்த இணைப்பு உங்கள் குழந்தைகளுக்குப் பயன்படலாம்.
http://www.enchantedlearning.com/subjects/astronomy/moon

Sunday, January 9, 2011

எங்களுக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும்.

ஆஸ்திரேலியாவின் தினசரிகளில் நேற்றும், இன்றும்  முதற்பக்கத்தில் வெளியான முக்கியமான செய்தி ஒன்று உங்கள் கவனத்தையும் கவரலாம். ஒரு தம்பதியினர் தங்களுக்கு IVF  சிகிச்சை முறையில் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றுக்கொள்ள உரிமையளிக்குமாறு கோரி வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.

தங்களைப் பற்றிய விபரங்களை வெளிப்படுத்திக் கொள்ளாத இந்தத் தம்பதியினர் இயற்கையான வழிமுறையில், பெற்றுக்கொண்ட மூன்று ஆண் பிள்ளைகளின் பெற்றோராவர். இவர்கள் அடுத்து ஒரு பெண் குழந்தையை வேண்டிய IVF சிகிச்சை முயற்சியின்போது உருவான இரட்டை ஆண் குழந்தைகளின் வளர்ச்சியை ஆரம்பத்திலேயே தடுத்து இடை நிறுத்தியிருக்கிறார்கள்.

இருபெண் பிள்ளைகளின் தகப்பன் என்ற வகையில் நான் கொண்ட பெருமிதத்தின் மகத்துவத்தை எனக்கு மேலும் உணர்த்திய இந்தத் தம்பதியினர் என்னைக் கவர்ந்ததில் ஆச்சரியமில்லைத்தானே?

மனித குலத்தின் பண்பாட்டு விழுமியங்களை மிகுந்த கேள்விக் உள்ளாயிருக்கும் இந்தத் தம்பதியினரின் வேண்டுகோளுக்கு மனித குலம், என்ன பதில் அளிக்கப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இணைப்புக்கள்

http://www.heraldsun.com.au/news/national/desperate-couple-abort-twin-boys-in-desperate-bid-for-ivf-girl/story-e6frf7l6-1225983907853

நியுசிலாந்துத் பெற்றோர்களின் கருத்துக்களை இங்கு காணலாம்.

http://www.treasures.co.nz/Community/Forum/Room/Topic/?topicId=41793

நீங்கள் என்ன சொல்லப்போகின்றீர்கள்?

செய்திகளைத் தந்தவர் சாதாரணன்.

மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.

Saturday, January 8, 2011

ரஜனியின் தோற்றம் மாறிடுமா?

மொட்டம் தலைக்கும் ஸ்டெம்செல்லுக்கும்
(Stem cell) முடிச்சுப்போட்டுட்டாங்கடோய்!!!!



பொதுவாகவே ஆண்களுக்கும், பெண்களுக்கும் பெரும் கவலையைத் தருகிற பிரச்சனைகளிலொன்று முடி உதிருதல். அதற்கு தற்போதய சிகிச்சை முறைகள் முடி உதிருதலை தடுப்பததுடன், உள்ள முடியைப் பாதுகாப்பாக பேணுகின்றன. ஆனால் புதிதாக முடிகளை உருவாக்குவதில்லை.

சமீபத்தில் பென்சிலவேனியா பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறைப் பேராசிரியர்
Dr. George Cotsarelis தலைமையிலான குழுவினர் முடியுதிருதல் என்ற குளறுபடிக்குக் காரணமான ஸ்டெம்செல்லைக் கண்டறிந்துள்ளனர். இதன்மூலம் புதிதாக முடிகளை உருவாக்கக் கூடிய சிகிச்சைமுறைகளை கண்டறிவதற்கு பெரியளவில் வழியேற்படுமென அறியப்படுகின்றது.

இப்ப சொல்லுங்க, எதிர்காலத்தில் ரஜனியின் தோற்றம் மாறிடும்தானே.
ரஜனி சிகிச்சைக்கு ஒத்துக்குவரா? அவர்தான் சாமியாராச்சே!

செய்திக்குத் தொடர்பான இணைப்புக்களில் ரொம்ப விவரமாவே எல்லாம் சொல்லியிருக்காங்க. நேரமிருக்கும்போது பாருங்க.

http://www.businessweek.com/lifestyle/content/healthday/648236.html

http://www.newscientist.com/article/dn19915-stem-cells-hold-key-to-cure-for-baldness.html

ரஜனியின் முடியழகை சிறப்பாகக் காண்பித்த முள்ளும் மலரும் திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி.





செய்திகளைத் தந்தவர் சாதாரணன்.

மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.

Friday, January 7, 2011

நாற்பது வருடங்கள் கடந்துவிட்ட ஒருநாள் கிரிக்கெட்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி நாற்பது வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு வருகின்ற 14 - 16 திகதிகளில் வரும் வார இறுதி நாட்களில் மெல்பேர்ணில் வெகுசிறப்பாக கொண்டாடுகின்றனர். 14ம் திகதி 20/20 கிரிக்கெட், முதலாவது கிரிக்கெட் போட்டியின்போது பங்குபெற்ற Bill Lawry  தலைமையிலான ஆஸ்திரேலிய அணியினருக்கு விக்டோரியா மாநிலத்தின் உத்தியோகபூர்வ அரசாங்க வாசஸ்தலத்தில் வரவேற்பு, அத்துடன் முத்தாய்ப்பாக 16ம் திகதி MCGயில் தற்போதைய ஆஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியென கொண்டாட்டம் களைகட்டவிருக்கின்றது.



1971ம் வருடம் தை மாதம் 5ம் திகதி MCGயில்  இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே முதலாவது போட்டி நடைபெற்றது.இதையொட்டி கிரிக்கெட் இரசிகர்களுக்கிடயே நடந்ததொரு வாக்கெடுப்பில் 2006ம் ஆண்டு ஆஸ்திரேலிய, சௌத் ஆபிரிக்க அணிகளுக்கிடையே நடந்த போட்டி இது நாள் வரை உலகில் நடந்த ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறந்த போட்டியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


என்றாலும் பாயிலை படுத்தபடி பொக்கட் ரேடியோவையும் காதுக்குள்ளே வைத்துக்கொண்டு இரவிரவாக கேட்டுக் கொண்டிருந்த எனக்கு கபில்தேவ் அன்றுபோட்ட விருந்தை, அந்த ஆட்டமிழக்காத 175ஐ மறக்க முடியுமா?
அது கிரிக்கெட்.






இணைப்புக்கள்

http://www.mcg.org.au/News/News/2011/January/ODI%2040th%20anniversary.aspx?sms_ss=twitter&at_xt=4d2563ea235401cf,0

இந்த இணைப்புக்குளிருக்கும் சுவாரசியமான இணைப்புக்களையும் பார்க்கவும்.

http://www.onehd.com.au/onehd/newsarticles/Cricket-Australia-South-Africa-clash-voted-best-S-727315.htm



செய்திகளைத் தந்தவர் சாதாரணன்.

மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.

Thursday, January 6, 2011

தாய்ப்பால் வங்கி

சேமிப்பு வங்கி, முதலீட்டு வங்கி, கடன் வங்கிகளென கேள்விப்பட்ட நாங்கள் தாய்ப்பால் வங்கியைப்பற்றி அறிந்திருக்கிறோமா? கடந்த சில ஆண்டுகளாக இவை அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்டு பலநாடுகளில் இயங்கி வருகின்றன. இந்தியாவில் மும்பையில் இயங்கி வருகின்றது. வேறு இடங்களிலும் இயங்குவது தெரிந்தால் சொல்லுங்கள்.

"ஒரு பச்சிளம் குழந்தை தன் சொந்தத்தாயிடம் பாலை பெற்றுக் கொள்ளுவதில் சிரமங்கள் இருந்தால், மாற்றாக வெறொரு தாயிடமிருந்து பெற்றுக்கொள்வதுதான் சிறந்தது. இதற்கு உறுதியளிக்கும் விதத்தில், பாதுகாப்பான வழிமுறைகளையும், தொடர்ச்சியான வழங்கல்களையும் தன்னகத்தேகொண்டு, தாய்ப்பால் வங்கிகள் பச்சிளம் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக தாய்ப்பாலை வழங்குமெனில், அவை இதைச்  செய்யலாம்." என்ற உலக சுகாதார நிறுவனத்தினரின் பரிந்துரைக்கமைய தாய்ப்பால் வங்கிகள் உலகில் செயற்பட்டு வருகின்றன.



தாய்ப்பால் வங்கிகள், நடைமுறையில் இடதுக்கிடம் கொண்டு செல்லுதல், சேமித்து வைத்தல், பதனிடுதல் போன்ற செயற்பாடுகளில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தாலும் பயன்பாட்டளவில் பெருவெற்றிகளை சாதித்து வருகின்றன. பின்னே! திடகாத்திரமான புதிய சந்ததியினரை உருவாக்கும் வங்கிகளல்லவா?

பின்வரும் இணைப்புக்களில் மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

http://www.nationalmilkbank.org/content.php?content_id=1002

http://mothersmilkbank.com.au/home/

http://www.breastfeedingindia.com/breastfeeding/human_milk_banks.html

http://www.ukamb.org/index.html




செய்திகளைத் தந்தவர் சாதாரணன்.


மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.

Wednesday, January 5, 2011

சின்னச் சின்னச் செய்திகள்!!!

முதலில் ஒரு சின்ன முன்டிஸ்கி:
 இதென்னடா இவன் பாட்டுக்கு வலைப்பக்கங்களாக ஆரம்பிச்சுக்கொண்டு போறானே தமிழ்மணம்(தமிழ்) தாங்குமா என்று  தமிழ்மணம் நிர்வாகிகள் முதற்கொண்டு வலைஞர்கள், வாசகர்கள் எல்லோருமே நினைக்கிறீங்க எனக்குப் புரிகிறது. என்னங்க பண்றது ரொம்ப எழுதணும் என்று ரொம்ப நாளாவே ஆசைங்க....  ஆனா எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும் என்பாங்களே அது இப்பதாங்க சரிவந்திருக்கு பொறுத்துக்குங்க. ஆனா சத்தியமா இத்தோடை நிறுத்திட்டேங்க!!

சின்னச் சின்னச் செய்திகள்!!!

சரி விசயத்துக்கு வருவோம். வேறுபாடின்றி பல துறைகளையும் சார்ந்த வித்தியாசமான செய்திகளை என் விமர்சனத்தையும் இலேசாக இழையோடவிட்டு பத்தியெழுத்துப் பாணியில் தரப்போகின்றேன். தினமும் குறைந்தது ஒன்றேனும் தருவதாக எண்ணம். அத்துடன் முடிந்தளவிற்கு செய்திக்குத் தொடர்பான வலைய இணைப்புகளையும் சேர்த்து தரவிருப்பதால் சேதி தொடர்பான மேலதிக விபரங்களை நீங்க்ள் அவ்வலையங்களில் பெற்றுக்கொள்ளலாம். கூடவே உங்கள் பின்னோட்டங்களும் இணையும் பொழுது எங்களிற்கிடையே செய்திகள் தொடர்பான விரிவானபார்வை உருவாகும். நம்பிக்கையுடன் நான் ரெடி நீங்க ரெடியா?

அன்புடன்
சாதாரணன்

பின் டிஸ்கியும் சின்னதுதான்:
இது சரி. மற்றது மூணும் என்னதுக்கடா என்னு கேட்பீங்க(ஏதோ சொல்லணும்னு நினைக்கிறே சீக்கிரமா சொல்லுடா வெட்டிப்பயலே..) அந்த வலைப்பூக்களில் விரிவாக சொல்லியிருக்கின்றேன்.  எனினும் சுருக்கமாக இங்கே.

மின்மினிப்பூக்கள்:- எனது பொழுதுபோக்குகளுடன் தொடர்புபட்ட கட்டுரைப்பாங்கிலான காத்திரமான படைப்புக்கள் - கொஞ்சம் நீண்ட பதிவுகள்.

மிச்சச்சொச்சம்:- ஈழத்தில் பிறந்து, வளர்ந்து, இந்தியாவில் பட்டப்படிப்பை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் வதியும் என் வாழ்க்கையிலேற்பட்ட சுவையான அனுபவங்கள். பதிவின் நீள, அகலம் சுவையைப்(உங்கள் இரசனையும்) பொறுத்து மாறுபடலாம்.

திசைகள் எங்கிலும் வணிகம்:- தகவல்(வலைய) தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள்  அனைத்தையும் கூடியளவில் உள்வாங்கி செயற்படுத்தும் துறைகளில் ஒன்றான மின்வணிகத்தின் நுட்ப, சூட்சும, தகவல்கள்களின் தொகுப்பு.

முதன்முதற் செய்தி இதுதான். இணைப்புக்களில் மேலதிக விபரங்களைப் பெறலாம் (இது எப்படி இருக்கு?)





செய்திகளைத் தந்தவர் சாதாரணன்.

மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.