Saturday, October 8, 2011

பக்கவாத நோயினால் செயலிழந்த உறுப்புக்களை மீண்டும் முழுமையாகச் செயற்பட வைக்கமுடியும்!!

அண்மையில் அமெரிக்காவிலுள்ள Duke பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்ட ஆய்வின் முடிவில் பக்கவாத நோயினால் செயலிழந்த உறுப்புக்களை மீண்டும்
பழைய நிலைக்கு கொண்டுவர முடியும் என்று கண்டுபிடித்துள்ளார்கள். வெறுமனே உறுப்புக்களை ஆட்டி அசைக்கலாம் என்ற நிலையையும் தாண்டி உணரக்கூடிய
வகையிலும் முழுமையாகச் செயற்பட வைக்கமுடியும் என்கிறார் இவ்வாய்வின் உறுப்பினரான விரிவுரையாளர் Miguel Nicolelis.


இவ்வாய்வானது குரங்கொன்றில் விழுமின்வாய்களை பதித்து மூளை - இயந்திரம் - மூளை இடைமுகச் செயற்பாட்டு முறையினால் நிகழ்த்தபட்டது.


இணைப்புக்கள்

செய்தியின் முழுவிபரங்களையும் இங்கே காணலாம்
http://www.theage.com.au/technology/sci-tech/monkeys-use-mind-control-to-move-a-virtual-arm-and-experience-touch-20111007-1lckw.html

Nature விஞ்ஞான சஞ்சிகையில் வந்த ஆய்வின் சுருக்கம் இங்குள்ளது. முழுக்கட்டுரையை கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.
http://www.nature.com/nature/journal/vaop/ncurrent/full/nature10489.html

மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.
அன்புடன்
சாதாரணன்

Friday, October 7, 2011

அப்பிள் நிறுவனத்தின் முகம் என வர்ணிக்கப்படும் திரு. Steve Jobs

கிராபிக்கல் யூசர் இன்ரபேசை (GUI) வர்த்தகரீதியில் உலகிற்கும் எங்களுக்கும் அறிமுகப்படுத்திய அப்பிள் நிறுவனத்தின் முகம் என வர்ணிக்கப்படும் திரு.
Steve Jobs அவர்கள் நேற்று காலமாகிய செய்தியை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.


திரு. Steve Jobs அவர்கள், கணணிகள் (Computers), கணணிகளுக்கான உதிரிப்பாகங்களென (Computer Accessories), iPod, iPhone, iPad  என பல்வேறுபட்ட முன்னூற்றுக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புக்களுக்கு உரித்துடையவர்.

இவரைப் பற்றிய மேலதிக விபரங்களை பின்வரும் வலைமனைகளில் காணலாம்.

  •  http://www.allaboutstevejobs.com/   இவ்வலைமனையில் திரு. Steve Jobs   அவர்களைப் பற்றி சுவாரசியமான பல தகவல்களைக் காணலாம். அத்துடன் திரு. Steve Jobs  அவர்களின் பல அரிய புகைப்படங்களும், வீடியோக்களும் காட்சிக்கு உள்ளன.


உங்கள் எண்ணங்களையும் துயரங்களையும் பின்வரும் வலைமனையில் பகிரலாம்.

பின்குறிப்பு: ஒரு இடைவெளி விட்டு மீண்டும் செய்திகளைத் தொடர்கின்றேன். இனித் தடங்கலில்லாமல் செய்திகளைத் தருவேன். எனினும் மீண்டும் நான் செய்திகளைத் தருவேன் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த 17 பின் தொடருநர்களுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.