Saturday, March 5, 2011

ஒரு அர்த்தமுள்ள சின்ன ஜோக்:

எனக்கு email இல் வந்தவொரு நல்லதொரு ஜோக். அனுப்பிய
கல்லூரி நண்பன் R.விஜயராமச்சந்திரனுக்கு நன்றிகள் உரித்தாகட்டும்.
உங்கள் பாராட்டுகளும் அவனுக்குத்தான்.

ஜோக்:
கடும் கோபத்தில் அந்த முதலாளி தனது ஊழியகர்ளிடம் கத்தினார்.
'நான்தான் இங்கு முதலாளி. நீங்கள் ஒன்றுமே இல்லை.
வெறும் பூஜ்யம். புரிகிறதா! இப்போது சொல்லுங்கள், நீங்கள் யார்?’

ஊழியர்கள் அமைதியாகப் பதில் அளித்தார்கள்: '... பூஜ்யம்!’

'அப்படியானால் நான் யார்?’ முதலாளியின் அடுத்த கேள்வி.
ஊழியர்கள் மீண்டும் அமைதியாக: 'பூஜ்யத்தின் முதலாளி’!

நீதி உங்களுக்குக் கீழ் இருப்பவர்களை மதிப்பானவர்களாக நியமித்து, மதிப்பானவர்கள் மதிப்பவராக உங்களை நீங்கள் தகுதிப் படுத்திக்கொள்ளுங்கள்!

Friday, March 4, 2011

Google இன் அதியுயர் உத்தரவாதம்.

இன்றைய கணணி யுகத்தில் இணையசேவைகளும் மனிதகுலத்தின் தொடர்பு வசதிகளில் முன்னிலை வகிக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே. மேலும் சமீபகாலங்களில் உலகில் இடம்பெற்ற இயற்கை அழிவுகளின்போது பாதிக்கபட்ட மக்கள் அவசர உதவித்தொடர்பு கொள்வதிலும் இவை குறிப்பிடத்தகுந்த இடத்தை வகித்ததை நாம் அறிவோம். அந்தவகையில் Google இன் பிரயொகங்களும் (applications) உதவுவதில் முன்னிலை வகித்தன.

இனி வரும் காலங்களில் தாங்கள் மென்மேலும் உலக மக்களுக்கு உதவுவோம் என்பதற்கு முன்மாதிரியாக பின்வரும் அதியுயர் உத்தரவாதத்தை Google உலகிற்கு அறிவித்துள்ளது. அதாவது தங்கள் அகராதியில் சேவை இடைநிறுத்தமே
(service downtime) இல்லை என்று சொல்லத்தகுந்த வகையில், அவர்களது சேவையின் உடன்பாட்டு இலக்கில் (service level agreement) முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சேவை இடைநிறுத்தமே இருக்காது என்று அவர்களது வாடிக்கையாளருக்கு அறிவித்துள்ளார்கள். எதிர்வரும் நாட்களில் Google இன் போட்டியாளர்களான Facebook, Microsoft போன்றவர்களும் இதைப் பின்பற்றுவார்கள் என உறுதியாக நாம் நம்பலாம்.

இணைப்புக்கள்
http://www.webpronews.com/2011/01/14/google-commits-to-9999-uptime-for-google-apps/
http://googleenterprise.blogspot.com/2011/01/destination-dial-tone-getting-google.html