Wednesday, January 12, 2011

புத்துயிர் பெறும் செய்மதித் தொடர்பு நிலையம்.

1962இல் ஆரம்பிக்கப்பட்டு ஒரு காலகட்டத்தில் உலகிலேயே மிகப்பெரிய செய்மதி தொடர்பு நிலையமாகவும் செயற்பட்டது Goonhilly Earth Station. இது 1969இல் சந்திரனில் மனிதன் காலடி வைத்த நேரத்திலும் முக்கிய பங்காற்றியது.  ஆனாலும் 2008இல் பெருமளவில் தனது செயற்பாடுகளை மட்டுப்படுத்திக்கொண்டதுடன் ஏறக்குறைய மூடிவிடும் நிலையை எட்டியிருந்தது.


இப்போது  ஒக்ஸ்போட் (Oxford) பல்கலைக்கழகம் உள்ளடங்கிய சில பிரித்தானிய, சர்வதேச விண்வெளி நிறுவனங்களின் கூட்டுமுயற்சியில் உருவான
Goonhilly Earth Station Ltd. (GES) என்ற பெயரில் மீண்டும் புத்துயிர் பெற்று முழுவீச்சுடன் செயற்படவிருக்கின்றது.

முதற்கட்டமாக மனிதன் சந்திரன், செவ்வாய் போன்ற கிரகங்களில் நிகழ்த்தவிருக்கும்  அடுத்தகட்ட விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு உறுதுணையாகவிருப்பதுடன்,
வானொலி வானியலின் (Radio Astronomy) துணைகொண்டு அறியப்படாத விஞ்ஞானப் புதிர்களான dark energy, quantum gravity தொடர்பான ஆராய்ச்சிகளிலும் ஈடுபடுத்திக் கொள்ளப்போகின்றது.
 
வளங்களை மீள உபயோகித்து மேலும் வளங்களை கண்டறிதல் என்றவகையிலும் முக்கியத்துவம் பெறும் இச்செயற்திட்டம் மனிதனின் தற்போதைய அறிவிற்கும் அப்பாற்பட்ட, உலக எல்லைகளை கடந்த விண்வெளியில் இதன் வீச்சம், எதிர்காலத்தில் பல சாதனைகளை நிச்சயமாக நிகழ்த்தும் என நாம் நம்பலாம்.


இணைப்புக்கள்
செய்தி தொடர்பான விளக்கமான விபரங்கள் இங்கும்
http://financial.tmcnet.com/news/2011/01/11/5237416.htm

செயற்பாடுகளை நிறுத்தியது பற்றிய செய்தி எனினும் அது கொண்டிருக்கும் செய்மதித்தொடர்பு வாங்கிகள் பற்றிய விபரங்கள் இங்குமுண்டு.
http://www.astroengine.com/2008/05/goonhilly-shutdown-of-the-worlds-largest-satellite-earth-station/

செய்திகளைத் தந்தவர் சாதாரணன்.
மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.

No comments:

Post a Comment