Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Saturday, December 29, 2012

வீட்டினுள்ளே காற்றைச் சுத்திகரிக்கும் உள்ளகத் தாவரங்கள்

வீட்டினுள்ளே காற்றைச் சுத்திகரிக்கும் உள்ளகத் தாவரங்கள்


நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளக தாவரங்களை வளர்ப்பவரா? உங்களுக்கு ஓர் நற்செய்தி!  உள்ளக தாவரங்கள் வீட்டினுள்ளேயுள்ள காற்றை சுத்திகரித்து சுகாதாரத்தையளிப்பதாக நாஸா நிறுவனத்தினர் நடத்திய ஆய்வொன்றின் முடிவு தெரிவித்துள்ளது.

வீட்டினுள்ளே காற்றைச் சுத்திகரிக்கும் உள்ளகத் தாவரங்கள் 
வீட்டினுள்ளே காற்றைச் சுத்திகரிக்கும் உள்ளகத் தாவரங்கள்


144 சதுர அடி கொண்ட அறையில் வைக்கப்படும் ஒரு தாவரமானது அந்த அறையிலுள்ள 90% வீதமான காற்றைச் சுத்திகரிக்கின்றது எனவும், இதனால் வீட்டிலுள்ளோரின் சுவாசம் சம்பந்தப்பட்ட சிக்கல்களும், மற்றும் தலையிடி போன்ற நோய்கள் வரும் சந்தர்ப்பங்கள் குறைவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பின்வரும் இணைப்புக்களில் எந்த வகையான தாவரங்கள் சிறந்தன என்ற விபரங்கள் உள்ளன.


இது ஒரு சிறிது திருத்தப்பட்ட மீள்பதிவு.

Wednesday, December 26, 2012

புனித நத்தார் தின வாழ்த்துக்கள்!!


எல்லோருக்கும் புனித நத்தார் தின வாழ்த்துக்கள்!!!!

 
Australian Christmas Greetings
அன்புடன் எல்லோருக்கும் எனது உளம் கனிந்த புனித நத்தார் தின வாழ்த்துக்கள்.
 

ஆஸ்திரேலிய கிறிஸ்மஸ்

ஆஸ்திரேலியாவில் தற்போது கோடை காலமாதலால், என்னதான் ஐரோப்பிய, ஆங்கில மரபுகளை உள்ளடக்கிய சில நடைமுறைகளான ட்டர்கி சிக்கன் (Turkey), பவ்லோவா டெசெர்ட் (Pavlova desert) உணவு வகைகளை கொண்டமைந்தாலும் , ஆஸ்திரேலியாவிற்கே உரித்தான பின்வளவு பார்பக்கியூ (Backyard BBQ), பீச் சேர்விங் (Beech Surfing) ஆகியவற்றோடு இணைந்து கிறிஸ்மஸ்ஸை கொண்டாடுவது ஆஸ்திரேலிய மரபாகி விட்டது. பாடசாலைகளுக்கு நீண்ட கால கோடை விடுமுறை என்பதால் பிள்ளைகளின் சந்தோஷத்திற்க்கும் குறைவில்லை. மீதியை இந்த படங்கள் சொல்லும்.

Saatharan Blog - Australian Christmas


Saatharan Blog - Australian Christmas

மீண்டும் எனது உளம் கனிந்த புனித நத்தார் தின வாழ்த்துக்கள்.
அன்புடன்  சாதாரணன்

Thursday, February 24, 2011

அவசர உதவித் தொடர்புகளில் காத்திரமான பங்கு வகிக்கும் சமூக ஊடக வலையமைப்புக்கள்.

சமீபத்தில் உலகில் நடந்த இயற்கை அழிவுகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் சமூக ஊடக வலையமைப்புகள் (social media networks).காத்திரமான பங்கு வகித்திருக்கின்றன. இது பற்றி சில எதிர்வினைகளுடனான விமர்சனங்கள் இருப்பினும் சமூக ஊடகங்கள் முன்னிலை வகித்தன என்பதை மறுக்கமுடியாது.

இதற்கு முன்னுதாரணமாக ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களிலும், நியூஸிலாந்தில் ஏற்பட்ட பூகம்பதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் facebook உம், twitter உம் கணிசமான பங்கு வகித்ததைக் கூறலாம். இச்செய்தியோடு தொடர்பான இன்னொரு செய்தியை அடுத்த செய்தியாக தரவிருக்கின்றேன்.

இணைப்புகள்.
செய்தி
http://voices.washingtonpost.com/fasterforward/2011/02/new_zealand_quake_search_effor.html
http://blog.iinet.net.au/social-media-queensland-floods/

இதுபற்றி Queensland University of Technology (QUT) விரிவுரையாளர் Professor Axel Bruns கருத்துக்களுடன் கூடிய கண்ணோட்டத்தை இங்கு காணலாம்.
http://www.cnet.ngo.net.au/content/view/51792/

Saturday, February 12, 2011

சந்தையில் விலைக்கு வந்துள்ள twitter!

உங்களுக்கு ஓர் சேதி தெரியுமா? twitter விலைக்கு வந்துள்ளது.  விலையாக
10 பில்லியன் அமெரிக்க வெள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதான் சமூக வலைப்பின்னல்(Social Network) வட்டாரத்தில் மிகவும் அடிபடுகிற செய்தி.
 
இந்தவிலைக்கு வாங்கக் கூடியவர்கள் Facebook அல்லது Google மட்டுமே. twitter ஐ வாங்கப்போவது Googleஆ  Facebookஆ அல்லது வேறு ஒரு நிறுவனமா?
பொறுத்திருந்துதான் பார்ப்போமே.

இணைப்புக்கள்
http://www.bayoubuzz.com/Technology/would-google-or-facebook-pay-$10-billion-for-twitter-mashable.html
http://www.guardian.co.uk/technology/organgrinder/2011/feb/10/twitter-facebook

Thursday, February 10, 2011

வீட்டினுள்ளே காற்றைச் சுத்திகரிக்கும் உள்ளகத் தாவரங்கள்.

நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளக தாவரங்களை வளர்ப்பவரா? 
உங்களுக்கு ஓர் நற்செய்தி!  உள்ளக தாவரங்கள் வீட்டினுள்ளேயுள்ள
காற்றை சுத்திகரித்து சுகாதாரத்தையளிப்பதாக நாஸா நிறுவனத்தினர்
நடத்திய ஆய்வொன்றின் முடிவு தெரிவித்துள்ளது.


144 சதுர அடி கொண்ட அறையில் வைக்கப்படும் ஒரு தாவரமானது அந்த அறையிலுள்ள 90% வீதமான காற்றைச் சுத்திகரிக்கின்றது எனவும், இதனால் வீட்டிலுள்ளோரின் சுவாசம் சம்பந்தப்பட்ட சிக்கல்களும், மற்றும் தலையிடி போன்ற நோய்கள் வரும் சந்தர்ப்பங்கள் குறைவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இணைப்புக்களில் எந்த வகையான தாவரங்கள் சிறந்தன என்ற விபரங்கள் உள்ளன.
http://scienceray.com/biology/ecology/keep-the-air-clean-in-your-home/
http://www.utne.com/Environment/NASA-sanctioned-houseplants-purify-indoor-air.aspx

Monday, February 7, 2011

சிசிகா3:மேலும் சில ஆஸ்திரேலியப் பாடல்கள்!

நீங்கள் கேள்விப்பட்டீர்களோ தெரியாது. ஆஸ்திரேலியாவின் பிரபலமான இசைக்குழுக்களிலொன்று Mid Night Oil. இவர்கள் சுற்றுப்புறச் சூழலிலும்,
மனித உரிமை தொடர்பான விடயங்களிலும் மிகவும் அக்கறை கொண்டவர்கள். இவர்களின் பாடல்களும் அவற்றையே பிரதிபலிக்கின்றன.
Mid Night Oil இசைக்குழுவின் பிரதான பாடகர் Peter Garrett இன்று ஆட்சியிலிருக்கும்  தொழிற்கட்சியின் அமைச்சர்களில் ஒருவர். இசைக்குழுவிலிருந்தபோது காட்டிய துடிப்பை (அவர் ஆட்டத்தைப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும்) அமைச்சராக செயற்படும்போது காட்டுவதேயில்லை என்ற காட்டமான விமர்சனமும் இவர்மீது உண்டு.

இனிப்பாடல்களைப் பாருங்களேன். பாடல் வரிகளையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

1. Blue Sky Mine. - Lyrics

2. Dead Heart - Lyrics

3. White Fella Black Fella - Lyrics

இணைப்புக்கள்.
http://www.midnightoil.com/
http://www.midnight-oil.info/
http://en.wikipedia.org/wiki/Midnight_Oil
http://en.wikipedia.org/wiki/Peter_Garrett
http://www.petergarrett.com.au/

Saturday, February 5, 2011

ஆஸ்திரேலியாவைக் கலங்கடிக்கும் காலநிலை

கடந்த சிலமாதங்களாக ஆஸ்திரேலியா காலநிலையால்  மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நான் வாழும் மாநிலமாகிய விக்டோரியாவும்
தற்போது பாதிப்புள்ளாகியுள்ளது. குறிப்பாக நான் வாழும் சுற்றுவட்டாரமும் (suburb) கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
ஐந்து மணிநேர  மின்வெட்டுக்குப்பின் (power-cut) இப்போதுதான் மின்சாரம் கிடைத்தது. நேற்றும் காலநிலைப் பாதிப்பால் மின்வெட்டிருந்தது.


இது சூறாவளி யாசியின் (Yasi) பாதிப்பென அறிவித்திருக்கிறார்கள். இந்தவார இறுதியில் மேலும் காலநிலை சீராக இருக்காதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனது மாநிலத்தில் வசிப்பவர்கள்:
பாதிப்புப் பற்றிய விபரங்களை உடனுக்குடன் அறிய
http://twitter.com/victoriapolice

அவசர-உதவி தொடர்பு பற்றிய விபரங்களுக்கு
http://www.vic.gov.au/news-detail/victorian-floods.html

இணைப்புக்கள்
செய்திகள்
http://www.theage.com.au/victoria/ses-orders-residents-out-amid-flood-warnings-20110114-19q3o.html
படங்கள்
http://port-phillip-leader.whereilive.com.au/photos/gallery/wild-weather-share-your-photos/

Thursday, February 3, 2011

அதி உக்கிரமமான வெப்பவலைய சூறாவளி (Tropical Cyclone) யாசி (Yasi)

ஆஸ்திரேலியாவின் சரித்திரத்தில், கடந்த நூற்றாண்டு காலத்திலேயே மிகவும் உக்கிரமான வெப்பவலைய சூறாவளியான யாசி, இன்று Queensland மாநிலத்தின் வடபகுதியை தாக்கியுள்ளது. சூறாவளியின்போது கூடியவரையில் மக்கள் பாதிக்கப்படாதவகையில் காப்பாற்றுவதற்காக அவசர உதவி சேவையினருடன் ஒன்றிணைந்து இராணுவத்தினரும், விமானப்படையினரும் பணியாற்றி வருகின்றனர்.


Queensland மாநில பிரதமர் Anna Blighயின் வேண்டுகோளையேற்று பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு இடம்பெயர்ந்துள்ளார்கள். குறிப்பாக ஆஸ்திரேலிய விமானப்படையினர், Royal Flying Doctors சேவையினருடன் ஒன்றிணைந்து Cairns நகர ஆஸ்பத்திரிகளிலிருந்த நூற்றுக்கணக்கான நோயாளர்களை மிகவும் பாதுகாப்பாக பிரிஸ்பேர்ண் நகரத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

அவசர-உதவி தொடர்புகளுக்கும், மற்றும் தகவல்களுக்கும்:
http://www.qld.gov.au/cyclone/

யாசி தொடர்பான செய்திகளை உடனுக்குடன் இந்த இணைப்புக்களில் அறியலாம்.
http://www.abc.net.au/emergency/cyclone/yasi/
http://www.bom.gov.au/products/IDQ65002.shtml
http://twitter.com/search?q=%23TCYasi

மேலதிக இணைப்புக்கள்
யாசி பற்றிய விபரங்களை இங்கு காணலாம்
http://www.brisbanetimes.com.au/environment/weather/yasi-hospital-evacuees-arrive-in-brisbane-20110202-1acsq.html
http://en.wikipedia.org/wiki/Severe_Tropical_Cyclone_Yasi

வெப்பவலய சூறாவளி பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.
http://en.wikipedia.org/wiki/Portal:Tropical_cyclones

Monday, January 31, 2011

பிரத்தியேகமாக ipad கணணியினிலே மட்டும் காணப்போகும் நாளிதழ்.

உலகத்தில் முதன்முறையாக ipad கணணியிலே மட்டுமே காணத்தகுந்த
முறையிலே வடிவமைக்கப்பட்ட நாளிதழான "The daily" பிப்ரவரி 2ஆம் திகதி
முதல் வெளிவருகின்றது. வாரத்திற்கு .99 US$ டொலர் சந்தா செலுத்தினால் ipad  கணணியிலே இந்நாளிதழைக் கண்டு வாசிக்கலாம்.
News corp நிறுவனத்தினர், ஆப்பிள் (Apple) கணணி நிறுவனத்தினரின் உதவியுடன் வெளியிடவிருக்கும் இந்நாளிதழ் வழமையான மற்ற நாளிதழ்களிலிருந்து எவ்வகையில் வேறுபட்டு தனித்தன்மையுடன் வாசகர்களைக் கவரப்போகின்றது? என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்ப்போமே.

இணைப்புக்கள்
செய்தியாக:
http://www.warwickdailynews.com.au/story/2011/01/28/news-corp-to-launch-ipad-newspaper/
http://money.cnn.com/2011/01/27/technology/ipad_the_daily/index.htm

இதுவரைக்கும் அறிந்தமட்டிலும் எதிர்பார்ப்பாக:
http://www.pcworld.com/article/211294/murdoch_and_jobs_ipadonly_news_app_what_we_know_so_far.html

செய்திகளைத் தந்தவர் சாதாரணன்.
மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.

Saturday, January 29, 2011

மழலைகளின் உணவில் அதிக கவனம் கட்டாயமாகத் தேவை.

மழலைகள் இலகுவாக தங்களுக்கு பிடித்தமான சுவையுடய உணவுகளை அடையாளம் கண்டுவிடுகிறார்களெனவும், அத்துடன் மழலைகள் அதீதமான
கொழுப்பு, உப்பு, இனிப்பு கொண்ட தீனிகளையே விரும்புவதாகவும் அமெரிக்காவில் அண்மையில் மழலைகளையும், பெற்றோர்களையும் உள்ளடக்கி நிகழ்ந்த பரிசோதனைகளுடன் கூடிய ஆய்வொன்றின் முடிவொன்று தெரிவித்துள்ளது.

இந்த ஆராய்ச்சிகளின் முடிவுகள் மிகுந்த கவலையளிப்பதாக இருந்தாலும் குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்ததிலிருந்தே பெற்றோர்கள் குழந்தைகளின்
உடல் நலத்திற்கேற்புடைய உணவுப் பதார்த்தங்களை அதிக அக்கறையுடன் கொடுக்கவேண்டுமென வலியுறுத்துகின்றது.

இணைப்புக்கள்
செய்தி
http://www.sfgate.com/cgi-bin/article.cgi?f=/g/a/2011/01/27/prweb8095251.DTL

சுருக்கமாக ஆய்வின் விபரங்கள்
http://www.laboratoryequipment.com/News-kids-fall-for-sugary-fatty-brands-012811.aspx

சில தீர்வுகள்
http://www.i-newswire.com/preschoolers-need-to-be-taught/86534

Friday, January 28, 2011

சாம்பலிருந்து மீண்டெழுந்து வந்த நிஜக் கதாநாயகன்!!

வெள்ள அழிவால் பாதிக்கப்பட்ட Qeensland மக்களுக்கு உதவிய குட்டிபையன் மீண்டும் ஆஸ்திரேலிய மக்களின் கவனத்தைக் கவர்ந்தான். இவன் இதற்கு முன்னரும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் கெவின் ருட்டினால்
'Pind sized Hero' என வர்ணிக்கப்பட்டதால் மக்களின் கவனத்திற்குள்ளானவன்.
2009ஆம் ஆண்டு விக்டோரியா மாநிலத்தில் காட்டுத்தீயினால் ஏற்பட்ட
பேரழிவினால் பாதிக்கப்பட்டு தனது தந்தையையும் இழந்த இந்த குட்டிப்பையன்  Bailey Lackas அப்போது கைகொடுத்த Queensland மக்களுக்குத்தானும் கைமாறு செய்யவேண்டும் என்ற முனைப்போடு தனது தாயாரோடு இணைந்து  வந்து தொண்டராக பணியாற்றவிருக்கின்றான்.

இணைப்புக்கள்
1.http://m.news.com.au/NationalNews/fi659491.htm

2.Pint-Sized Hero

செய்திகளைத் தந்தவர் சாதாரணன்.
மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.

Thursday, January 27, 2011

நம்ம ரஜினி படம் ரஸ்ய மொழியிலும் டப்பாகி இருக்கிறது.

இதற்கு முதல் தமிழ்ப்படம் வெறெதுவும் டப் பண்ணியிருக்காங்களா
என்று தெரியவில்லை. நம்ம ரஜினி படம் எந்திரனை ரஸ்ய மொழியில் டப் பண்ணியுள்ளார்கள். 
இந்தப் பெருமை தமிழ்திரைப்படத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு கிடைத்த உலக அங்கிகாரம் என மகிழ்ச்சியுடன் நாம் சந்தோஷம் கொள்ளலாம். அதுவும் தமிழில் வெளிவந்த விஞ்ஞானப் புனைவுத் திரைப்படம் என்பதால் இரட்டிப்பு சந்தொஷம். ஷங்கரின் பல வருடக் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

இணைப்புக்கள்
செய்தியாகவும்
http://theblemish.com/2011/01/robot-is-fairly-ridiculous-awesome/

கருத்துக்களாகவும்
http://www.reddit.com/r/funny/comments/f8wc6/best_action_scene_ever/

செய்திகளைத் தந்தவர் சாதாரணன்.
மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.

Wednesday, January 26, 2011

சி.சி.கா2: ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு விசேட வீடியோ காட்சிகள்

ஆஸ்திரேலியாவில் பிரபலமான சில பாடல் காட்சிகளை
ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு தந்துள்ளேன் முதலில்
ஆஸ்திரேலிய பழங்குடிமக்களின் இசைக்குழுவினர் yutho yindiயின்
பாடல்களில் பிரபல்யமானதொன்றைப் பாருங்களேன்.

ஆஸ்திரேலியாவில் இரசிகர்களின் ஏகோபித்த பாடகர் John Farnham அவர்களின்
You Are Voice பாடலை அடுத்ததாகத் தந்துள்ளேன்.  இது ஆஸ்திரேலியாவின் தேசியகீதம் என்று சொல்லப்படுமளவுக்கு பிரபல்யமானது. இரசிகர்களை தனது இசையால் மயக்கி பாடவும், ஆடவும் வைத்துவிடுவார். இவர் இசைத்துறையிலிருந்து ஓய்வெடுப்பதற்கு விரும்பினாலும் இரசிகர்கள் விடுவதாயில்லை.

மேலும் சில பாடல்களை அடுத்தடுத்த நாட்களில் தருகின்றேன்.

காட்சிகளைத் தந்தவர் சாதாரணன்.
மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.

ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!.

இன்று ஆஸ்திரேலியா தினம் ஆகும். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள மக்கள் எல்லோரும் தேசிய ரீதியாகக் வெகு சிறப்பாக ஆஸ்திரேலியா தினத்தைக்  கொண்டாடுகின்றனர். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும்
சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு உத்தியோகபூர்வமாக ஆஸ்திரேலிய
அரசினரால் வழங்கப்படும் அதியுயர் விருதான இவ்வருடத்திற்கான
ஆஸ்திரேலியன் (Australian of the year) விருதை விக்டோரியா மாநிலத்தை
சேர்ந்த வர்த்தகப் பிரமுகரும், சமூக சேவையாளருமான Mr.Simon McKeon பெறுகின்றார். இந்த விருது ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு முன்மாதிரியாகத்
திகழும் தலைமைத்துவமிக்க கௌரவமான குடிமகனொருவருக்கு வருடம்
தோறும் வழங்கப்படும் சிறப்பானதொரு விருதாகும்.

தெளிவான பளிங்கு நீலக்கடலால் சூழப்பட்ட, அழகான கடற்கரைகளும், தொன்மையான புராதனமிக்க பாறைகளும், மழைவனக்காடுகளும்
நிறையப்பெற்ற இயற்கைவளமிக்க ஆஸ்திரேலிய நாட்டின் குடிமகனான
நானும் ஆஸ்திரேலிய தினத்தை இன்று விமரிசையாகக் கொண்டாடுகின்றேன்.
எல்லோருக்கும் எனது அன்பு நிறைந்த ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!.
 
இணைப்புக்கள்
ஆஸ்திரேலியா தினவிபரங்கள்
http://www.australiaday.org.au/

விருதுகள் பற்றிய விபரங்கள்
http://www.australianoftheyear.org.au/

ஆஸ்திரேலியாவின் பன்முகத்தையும் இரசிக்க
http://www.australia.com/about/AboutAustralia.aspx
http://walkaboutplanner.australia.com/index.html#/trips/

Saturday, January 22, 2011

ஏன்னா நான் உன் நண்பேண்டா!!

இது காலம் கடந்த உறவு ஏன்னா நான் உன் நண்பேண்டா!! என்று சில வேளைகளில் விளையாட்டாக்கூட சொல்வோமல்லவா?  இனிமேல் அதை அழுத்தம் திருத்தமாக உணர்ச்சிபூர்வமாகவே நீங்கள் சொல்லலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞான பூர்வமாக கூறுகின்றார்கள். ஏனென்று பார்ப்போமா?
விஞ்ஞானிகள் ஏன் உங்களுக்கு சிலரை பார்த்தமாத்திரத்திலேயே பிடித்து விடுகின்றது என்றால் உங்களில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட ஜீன் இதில் சம்பத்தப்பட்டிருக்கிறது என்றும், அதேபோல் நீங்கள் கண்டமாத்திரதிலேயே வெறுப்பதிலும் வேறோரு குறிப்பிட்ட ஜீன் சம்பத்தபட்டிருக்கிறது என்கிறார்கள்.
இப்ப சொல்லுங்கோ உங்கள் நட்பு காலம் கடந்ததா இல்லையா?

இந்தப்பாடலைப் பார்த்துவிட்டுப் பின்னர் இணைப்புக்களில் விபரங்களைப் பாருங்களேன்.

இணைப்புக்கள்
http://www.bbc.co.uk/news/science-environment-12207954
http://news2.onlinenigeria.com/world/69652-Best-friends-forever-gene-Its-all-our-DNA-say-scientists.html

Friday, January 21, 2011

கல்லறையிலிருந்து கருவறைக்கு

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட உயிரினம் ஒன்று உயிருடன் உங்கள் முன்னால் உலா வரப்போகின்றது என்றால் நம்பமுடிகின்றதா? தற்போது ஜப்பானில் நடந்து வரும் ஆராய்ச்சி வெற்றியளிக்குமாயின் இன்னும் ஐந்து வருடங்களில் நிகழப்போகும் நிதர்சனம் இது.
 
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பனிக்கட்டிக் காலத்தில் ரஸ்யாவின் சைபீரிய வெளிகளில் வாழ்ந்த ஒருவகை யானையினம் பூமியில் ஏற்பட்ட திடீர் வெப்ப உயர்வால் முற்றிலுமாக அழிந்தது. இந்த உயிரினத்தைதான் மீண்டும் அதன் DNA மூலக்கூறுகளிலிருந்து உயிர்ப்பிக்கும் முயற்சியில் ஜப்பான் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.

மமூத் எனப்படும் இந்த உயிரினத்தின் செல்களின் DNA மூலக்கூறுகளை யானையின் வெற்றுக் கருமுட்டையினுள் செலுத்திப் பின்னர் பரிசோதனைச்சாலையில் சிலநாட்களுக்கு கருவை வளர்த்தெடுத்து யானையின் கருப்பையினுள் வைப்பதன் மூலம் உருவாகும் குட்டி முழுமைபெற குறைந்தது 600 நாட்களாவது எடுக்கும்.

இணைப்புக்கள்.
http://theweek.com/article/index/211207/cloning-the-woolly-mammoth-a-worrying-precedent

பழைய செய்தியெனினும் விரிவாக ஆராய்ந்துள்ளது.
http://news.nationalgeographic.com/news/2005/04/0408_050408_woollymammoth.html

Thursday, January 20, 2011

சிசிகா: நரேஷ்-ஐயரின் துள்ளல் ஜாலி

அதென்ன சிசிகா சிசிசெயல்லோ  என்பீர்கள். இந்தப் பதிவுபோல் இனிமேலும் அப்பபோ நான் கண்டு இரசிக்கும் காட்சிகளை தரலாம் என்றிருக்கின்றேன்.
இது வெள்ளோட்டம். சில சினிமாப் பாடல்களைக் கேட்டால் சினிமாக்காட்சி ஞாபகத்திற்கு வரும். இந்தகாட்சியை பார்த்தபின் இதுதான் ஞாபகத்திற்கு வரலாம்?

சின்னச் சின்னக் காட்சிகள்!
நரேஷ் ஐயர் மலையாளத் தொலக்காட்சியொன்றின் புதுவருட நடனவிருந்தில்
(stage show) கலக்கியிருக்கிறார் பாருங்களேன்.

இது உபரிதான் (போனஸ்). எப்போதும்போல சின்னச் சின்னச் செய்திகள் இருக்கும். நம்பிக்கையுடன் வாருங்கள். நாளை இரு செய்திகள்!!. (இன்று விட்டதையும் சேர்த்து)

காட்சிகளைத் தந்தவர் சாதாரணன்.
மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.

Wednesday, January 19, 2011

புலத்திலும் புகழுடன் திகழப்போகும் தமிழ்ப்படம்.

கோடம்பாக்கத்தின் செட்டுக்களுக்குள் குதிரை ஓட்டிக்கொண்டு வீரவசனங்கள் பேசிய நம்ம ஹீரோக்கள், மதுரையின் சந்துபொந்துகளுக்குள் சேவல்களுடன் கதை பேசுமளவுக்கு  இயக்குனர்களின் செல்லப்பிள்ளைகள் ஆகிவிட்டார்கள். புலத்திலும் தமிழ்படத்தின் சாயலிருந்து விலகி சொந்தக்கதையைப் பேசியிருக்கிறது 1999.

தமிழ்ப்படத்தின் பொற்காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அது மிகையல்ல உண்மை. ஹீரோக்கள் விம்பங்களை உடைத்து சாதாரணர்களாக இயக்குனர்களின் தயவில் வித்தியாசமான களங்களில் வாழத்தலைப்பட்டு விட்டார்கள். தொழில்நுட்பத்தினரும் சினிமாவின் எல்லாத் துறைகளிலும்  கொடிகட்டிப் பறக்கிறார்கள். தமிழ்படங்களுக்கு உலகத் திரைப்பட விழாக்களில் விருது என்பது ஆஸ்கார் உட்பட எட்டிய கனியாகிவிட்டது.

புலத்திலும் இதனை மெய்ப்பிக்கும் வண்ணம், சென்ற ஆண்டில் கனடாவில் வெளிவந்திருக்கும் படம்தான் 1999. இது பல உலகத் திரைப்பட விழாக்களிலும் பங்குகொண்டுள்ளதுடன் விருதுகளையும் பெற்றுள்ளது.



புலத்திலிருந்து இனிமேல் வரவிருக்கும் தமிழ்ப்படங்கள் உலகத் தரத்தையும் விஞ்சியிருக்கும் என்பதற்கு ஒரு நல்ல ஆரம்பம் 1999.



இணைப்புக்கள்

1.படத்தின் உத்தியோகபூர்வ வலைமனை
    http://www.1999movie.com/

2.இயக்குனரின் youtube பக்கம்
    www.youtube.com/user/leninmsivam

3.இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவு இயக்குனர்களின் பேட்டிகள்
    பகுதி1        பகுதி2        பகுதி3       பகுதி4         பகுதி5

4. படத்தின் கதைப் பின்னணியை உள்ளடக்கிய நல்லதொரு விமர்சனம்

 செய்திகளைத் தந்தவர் சாதாரணன்.
மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.

Monday, January 17, 2011

கிளுகிளுப்பில்லாத செக்ஸ் சமாச்சாரம்.

நீங்க நினைக்கிற மாதிரி ரொம்ப விவகாரமான விஷயம் இல்லைங்க. எதிர்பார்த்து வந்திடாந்திங்க. ஆனா உங்க அறிவுக்கு அவசியம் தேவையானதொன்றுங்க.  ஒண்ணுமே புரியலையா? அப்ப வந்துதான் பாருங்களேன். விஷயம் இதுதான்.

விண்வெளியில் பாலியல்

நாசா(மனிதன்), அடுத்தகட்ட ஆராய்ச்சிகளை சந்திரனிலும், செவ்வாயிலும் கொஞ்சம் காத்திரமாகவே நிகழ்த்தவிருப்பது தெரிந்ததே. அதற்கு முன்னோடியாக செவ்வாய்க்கான ஒரு வழிப்பயணத்திற்கு தன்னிச்சையாக முன்வரும் பயணிகளை திரட்டுவதையும் நீங்கள் அறிந்திருக்கலாம்.
இப்போது வேறொரு திசையிலும் நாசா ஆராய்ச்சிகளை முடுக்கிவிட்டுள்ளார்கள். அதுதாங்க, விண்வெளியில் பாலியல்.  (புவி)ஈர்ப்புவிசையில்லாத நிலையில் பாலுணர்வோடு கூடிய செயல்களுக்கான சாத்தியம், குழந்தைகள் உண்டாவதற்கான வாய்ப்புக்கள்,  பாலுணர்வோடு கூடிய செயற்பாடுகள் அவசியம்தான் என்ற  நிலையை உருவாக்கும் சூழ்நிலைகள், போன்றவை உள்ளிட்ட பல கோணங்களில் ஆராயவிருக்கிறார்கள்.

விசயத்தை காதிலை போட்டுட்டேன். இனி மேலும் தெரிஞ்சுக்கிறதுன்னா இணைப்புக்களில் போய்ப்பாருங்க. தலை சுத்துதா? இந்த பாட்டை கேட்டுட்டு போங்களேன்.
Naanrompaa.mp3

இணைப்புக்கள்
ரொம்ப விவரமா வேணும்னா இங்க பாருங்க.
http://www.aolnews.com/2011/01/14/sex-in-space-the-final-frontier/
http://blog.seattlepi.com/thebigblog/archives/235699.asp

விரிவாக ஆராய்ச்சிக்குரிய கேள்விகளுடனான கட்டுரை இங்கே.
http://journalofcosmology.com/Mars144.html

செய்திகளைத் தந்தவர் சாதாரணன்.
மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.

Saturday, January 15, 2011

வாழ்த்துச் செய்தியும் சின்னக் கவிதையும்.

எல்லோருக்கும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் வாழ்த்துகள், கூடவே தமிழ்ப்புத்தாண்டு வாழ்துக்களும் உரித்தாகட்டும். ஒரு சின்னக்கவிதை
கொஞ்சம் அவ்வையார், மிச்சம் நான்.


                                       வரப்புயர நீருயரும்.
                                       நீர் உயர நெல் உயரும்.
                                       நெல் உயர அறுவடை பெருகும்.
                                      அறுவடை பெருக உழவன் உயர்வான்.
                                       உழவன் உயர்ந்தால் உலகமே செழிக்கும்.

                                     அன்புடன்.
                                     சாதாரணன்.


இணைப்புக்கள்
உங்களுக்கும் குழந்தைகளுக்கும்.
http://en.wikipedia.org/wiki/Thai_Pongal
http://www.pongalfestival.org/pongal-festival.html

செய்திகளைத் தந்தவர் சாதாரணன்.
மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.