Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Wednesday, December 26, 2012

புனித நத்தார் தின வாழ்த்துக்கள்!!


எல்லோருக்கும் புனித நத்தார் தின வாழ்த்துக்கள்!!!!

 
Australian Christmas Greetings
அன்புடன் எல்லோருக்கும் எனது உளம் கனிந்த புனித நத்தார் தின வாழ்த்துக்கள்.
 

ஆஸ்திரேலிய கிறிஸ்மஸ்

ஆஸ்திரேலியாவில் தற்போது கோடை காலமாதலால், என்னதான் ஐரோப்பிய, ஆங்கில மரபுகளை உள்ளடக்கிய சில நடைமுறைகளான ட்டர்கி சிக்கன் (Turkey), பவ்லோவா டெசெர்ட் (Pavlova desert) உணவு வகைகளை கொண்டமைந்தாலும் , ஆஸ்திரேலியாவிற்கே உரித்தான பின்வளவு பார்பக்கியூ (Backyard BBQ), பீச் சேர்விங் (Beech Surfing) ஆகியவற்றோடு இணைந்து கிறிஸ்மஸ்ஸை கொண்டாடுவது ஆஸ்திரேலிய மரபாகி விட்டது. பாடசாலைகளுக்கு நீண்ட கால கோடை விடுமுறை என்பதால் பிள்ளைகளின் சந்தோஷத்திற்க்கும் குறைவில்லை. மீதியை இந்த படங்கள் சொல்லும்.

Saatharan Blog - Australian Christmas


Saatharan Blog - Australian Christmas

மீண்டும் எனது உளம் கனிந்த புனித நத்தார் தின வாழ்த்துக்கள்.
அன்புடன்  சாதாரணன்

Saturday, March 5, 2011

ஒரு அர்த்தமுள்ள சின்ன ஜோக்:

எனக்கு email இல் வந்தவொரு நல்லதொரு ஜோக். அனுப்பிய
கல்லூரி நண்பன் R.விஜயராமச்சந்திரனுக்கு நன்றிகள் உரித்தாகட்டும்.
உங்கள் பாராட்டுகளும் அவனுக்குத்தான்.

ஜோக்:
கடும் கோபத்தில் அந்த முதலாளி தனது ஊழியகர்ளிடம் கத்தினார்.
'நான்தான் இங்கு முதலாளி. நீங்கள் ஒன்றுமே இல்லை.
வெறும் பூஜ்யம். புரிகிறதா! இப்போது சொல்லுங்கள், நீங்கள் யார்?’

ஊழியர்கள் அமைதியாகப் பதில் அளித்தார்கள்: '... பூஜ்யம்!’

'அப்படியானால் நான் யார்?’ முதலாளியின் அடுத்த கேள்வி.
ஊழியர்கள் மீண்டும் அமைதியாக: 'பூஜ்யத்தின் முதலாளி’!

நீதி உங்களுக்குக் கீழ் இருப்பவர்களை மதிப்பானவர்களாக நியமித்து, மதிப்பானவர்கள் மதிப்பவராக உங்களை நீங்கள் தகுதிப் படுத்திக்கொள்ளுங்கள்!

Thursday, February 24, 2011

அவசர உதவித் தொடர்புகளில் காத்திரமான பங்கு வகிக்கும் சமூக ஊடக வலையமைப்புக்கள்.

சமீபத்தில் உலகில் நடந்த இயற்கை அழிவுகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் சமூக ஊடக வலையமைப்புகள் (social media networks).காத்திரமான பங்கு வகித்திருக்கின்றன. இது பற்றி சில எதிர்வினைகளுடனான விமர்சனங்கள் இருப்பினும் சமூக ஊடகங்கள் முன்னிலை வகித்தன என்பதை மறுக்கமுடியாது.

இதற்கு முன்னுதாரணமாக ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களிலும், நியூஸிலாந்தில் ஏற்பட்ட பூகம்பதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் facebook உம், twitter உம் கணிசமான பங்கு வகித்ததைக் கூறலாம். இச்செய்தியோடு தொடர்பான இன்னொரு செய்தியை அடுத்த செய்தியாக தரவிருக்கின்றேன்.

இணைப்புகள்.
செய்தி
http://voices.washingtonpost.com/fasterforward/2011/02/new_zealand_quake_search_effor.html
http://blog.iinet.net.au/social-media-queensland-floods/

இதுபற்றி Queensland University of Technology (QUT) விரிவுரையாளர் Professor Axel Bruns கருத்துக்களுடன் கூடிய கண்ணோட்டத்தை இங்கு காணலாம்.
http://www.cnet.ngo.net.au/content/view/51792/

Tuesday, February 22, 2011

வெகுசிறப்பாக வாழத்தகுந்த நகரங்கள்

உலகில் வெகுசிறப்பாக  வாழத்தகுந்த நகரங்கள் தரப்பட்டியலில் நான் வாழும் நகரமான மெல்பேர்ண் நகரம் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் பத்து இடங்களில் ஆஸ்திரேலியாவின் நகரங்கள் நான்கு இடங்களைப் பிடித்துக்கொண்டுள்ளன.
Melbourne City

சுற்றுபுறச்ச்சூழல், சுகாதார கல்வி வசதிகள், மற்றும் தனிமனித பாதுகாப்பு (Personal safety) போன்ற 30 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இத்தரப்பட்டியல் The Economist Intelligence Unit இனால் வெளியிடப்பட்டுள்ளது.

இணைப்புக்கள்
http://www.reuters.com/article/2011/02/21/us-cities-liveable-idUSTRE71K0NS20110221

http://www.huffingtonpost.com/2011/02/21/worlds-most-liveable-cities_n_825964.html

http://www.economist.com/blogs/gulliver/2011/02/liveability_ranking

Friday, February 18, 2011

சோம்பேறி என்று கவலைப்படுகிறீர்களா?

கவலையை விடுங்கள்! உங்கள் சோம்பலுக்கு காரணமான ஜீனையும் விஞ்ஞானிகள் கன்டுபிடித்து விட்டார்கள். நீங்கள் உறக்கத்திலிருந்து விழிப்பதற்கு சிரமப்படுவதற்கு காரணமான இந்த ஜீனேதான் ஒரு முழுநாளுக்குமான உங்கள் உறக்க - விழிப்பு
வட்டத்தின் ஒழுங்கமைப்பைத் (sleep cycle rhythms) தீர்மானிக்கின்றது.

ஒரு பழப்பூச்சியை மையமாகக்கொண்டு  அமெரிக்காவிலுள்ள Northwestern University இல் Dr. Ravi Allada  தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் நடாத்திய பரிசோதனைகளின் முடிவுகளின் இது கண்டறியப்பட்டுள்ளது. இது மனிதனுக்கும் பொருந்தக் கூடியதாகுமெனவும் கூறியுள்ளார்கள்.

இணைப்புக்கள்
செய்தி
http://www.thirdage.com/news/sleep-cycle-rhythms-regulated-genes_2-17-2011

விளக்கமான விபரங்கள்
http://www.innovations-report.com/html/reports/studies/waking_hard_170292.html

முழுமைமையான பரிசோதனை முடிவுகள் (சந்தா தேவை)
http://www.nature.com/nature/journal/v470/n7334/full/nature09728.html

Thursday, February 17, 2011

சிசிகா5: இளமை துள்ளிய பிலிம்பேர் விருது விழா - 56th Filmfare Awards

சமீபத்தில் நடந்த பிலிம்பேர் விழாவில் இளமை துள்ளியது என்றால் அதில் மிகையில்லை. இதில் பெரும்பங்கு நிகழ்ச்சியைத் நல்ல நகைச்சுவையுணர்வோடு தொகுத்தளித்த இளம் நடிகர்களான  Imran Khan, Ranbir Shingh, இருவரையுமே சேரும். விழாவிலிருந்து மூன்று வீடியோக் காட்சிகளைத் தந்துள்ளேன்.

இசையால் வசையாகாத இதயம் எது என்பதை நிருபிக்கும் விதத்தில்
இந்த பகுதியை வழங்கிய Sonu Nigam எல்லோர் மனதையும் இசையால்
கவர்ந்து சென்றார்.

கனவுலகத் தொழிற்சாலை எத்தனையோ சினிமாக்களில் இரசிகர்களை
கால இயந்திரத்தில் பயணிக்க வைத்துள்ளது. ஆனால் இந்த நிகழ்ச்சி
நிஜமாகவே இரசிகர்களை பயணிக்க வைத்தது.
 

Monday, February 14, 2011

சிசிகா4: காதலர்தினம் (Valentine'sDay) Special

ஒரு பாட்டுக்கு இசை முக்கியமா இல்லை கவிதை முக்கியமா? இல்லையில்லை காதல்தான் முக்கியம் என்கிறது இந்தப்பாடல். சென்னையே கொண்டாடிய இந்தப் பாடலைப் பார்த்துவிட்டு சொல்லுங்கள் உண்மையா இல்லையா என்று.

காதல் வந்தால் எல்லாமே மறந்து போய்விடும் என்பதை வெகுளித்தனமாக புரியவைத்து எல்லோர் மனதையும் கொள்ளைகொண்ட மற்றுமோர் நல்ல பாடல்.

திருமணத்திற்கு முன் காதலிப்பவர்களுக்கும், திருமணத்திற்குப்பின் மனைவியைக் காதலிப்பவர்களுக்கும் என் அன்பான காதலர்தின வாழ்த்துக்கள்.

Monday, February 7, 2011

சிசிகா3:மேலும் சில ஆஸ்திரேலியப் பாடல்கள்!

நீங்கள் கேள்விப்பட்டீர்களோ தெரியாது. ஆஸ்திரேலியாவின் பிரபலமான இசைக்குழுக்களிலொன்று Mid Night Oil. இவர்கள் சுற்றுப்புறச் சூழலிலும்,
மனித உரிமை தொடர்பான விடயங்களிலும் மிகவும் அக்கறை கொண்டவர்கள். இவர்களின் பாடல்களும் அவற்றையே பிரதிபலிக்கின்றன.
Mid Night Oil இசைக்குழுவின் பிரதான பாடகர் Peter Garrett இன்று ஆட்சியிலிருக்கும்  தொழிற்கட்சியின் அமைச்சர்களில் ஒருவர். இசைக்குழுவிலிருந்தபோது காட்டிய துடிப்பை (அவர் ஆட்டத்தைப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும்) அமைச்சராக செயற்படும்போது காட்டுவதேயில்லை என்ற காட்டமான விமர்சனமும் இவர்மீது உண்டு.

இனிப்பாடல்களைப் பாருங்களேன். பாடல் வரிகளையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

1. Blue Sky Mine. - Lyrics

2. Dead Heart - Lyrics

3. White Fella Black Fella - Lyrics

இணைப்புக்கள்.
http://www.midnightoil.com/
http://www.midnight-oil.info/
http://en.wikipedia.org/wiki/Midnight_Oil
http://en.wikipedia.org/wiki/Peter_Garrett
http://www.petergarrett.com.au/

Saturday, February 5, 2011

ஆஸ்திரேலியாவைக் கலங்கடிக்கும் காலநிலை

கடந்த சிலமாதங்களாக ஆஸ்திரேலியா காலநிலையால்  மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நான் வாழும் மாநிலமாகிய விக்டோரியாவும்
தற்போது பாதிப்புள்ளாகியுள்ளது. குறிப்பாக நான் வாழும் சுற்றுவட்டாரமும் (suburb) கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
ஐந்து மணிநேர  மின்வெட்டுக்குப்பின் (power-cut) இப்போதுதான் மின்சாரம் கிடைத்தது. நேற்றும் காலநிலைப் பாதிப்பால் மின்வெட்டிருந்தது.


இது சூறாவளி யாசியின் (Yasi) பாதிப்பென அறிவித்திருக்கிறார்கள். இந்தவார இறுதியில் மேலும் காலநிலை சீராக இருக்காதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனது மாநிலத்தில் வசிப்பவர்கள்:
பாதிப்புப் பற்றிய விபரங்களை உடனுக்குடன் அறிய
http://twitter.com/victoriapolice

அவசர-உதவி தொடர்பு பற்றிய விபரங்களுக்கு
http://www.vic.gov.au/news-detail/victorian-floods.html

இணைப்புக்கள்
செய்திகள்
http://www.theage.com.au/victoria/ses-orders-residents-out-amid-flood-warnings-20110114-19q3o.html
படங்கள்
http://port-phillip-leader.whereilive.com.au/photos/gallery/wild-weather-share-your-photos/

Thursday, February 3, 2011

அதி உக்கிரமமான வெப்பவலைய சூறாவளி (Tropical Cyclone) யாசி (Yasi)

ஆஸ்திரேலியாவின் சரித்திரத்தில், கடந்த நூற்றாண்டு காலத்திலேயே மிகவும் உக்கிரமான வெப்பவலைய சூறாவளியான யாசி, இன்று Queensland மாநிலத்தின் வடபகுதியை தாக்கியுள்ளது. சூறாவளியின்போது கூடியவரையில் மக்கள் பாதிக்கப்படாதவகையில் காப்பாற்றுவதற்காக அவசர உதவி சேவையினருடன் ஒன்றிணைந்து இராணுவத்தினரும், விமானப்படையினரும் பணியாற்றி வருகின்றனர்.


Queensland மாநில பிரதமர் Anna Blighயின் வேண்டுகோளையேற்று பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு இடம்பெயர்ந்துள்ளார்கள். குறிப்பாக ஆஸ்திரேலிய விமானப்படையினர், Royal Flying Doctors சேவையினருடன் ஒன்றிணைந்து Cairns நகர ஆஸ்பத்திரிகளிலிருந்த நூற்றுக்கணக்கான நோயாளர்களை மிகவும் பாதுகாப்பாக பிரிஸ்பேர்ண் நகரத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

அவசர-உதவி தொடர்புகளுக்கும், மற்றும் தகவல்களுக்கும்:
http://www.qld.gov.au/cyclone/

யாசி தொடர்பான செய்திகளை உடனுக்குடன் இந்த இணைப்புக்களில் அறியலாம்.
http://www.abc.net.au/emergency/cyclone/yasi/
http://www.bom.gov.au/products/IDQ65002.shtml
http://twitter.com/search?q=%23TCYasi

மேலதிக இணைப்புக்கள்
யாசி பற்றிய விபரங்களை இங்கு காணலாம்
http://www.brisbanetimes.com.au/environment/weather/yasi-hospital-evacuees-arrive-in-brisbane-20110202-1acsq.html
http://en.wikipedia.org/wiki/Severe_Tropical_Cyclone_Yasi

வெப்பவலய சூறாவளி பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.
http://en.wikipedia.org/wiki/Portal:Tropical_cyclones

Tuesday, February 1, 2011

25 ஆண்டுகளுக்கு மேலாக தினமும் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகம்.

ஒன்றல்ல, இரண்டல்ல,இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக தினமும் ஆஸ்திரேலியாவில் எல்லோரும் விருப்பத்துடன் குடும்பத் தொலைக்காட்சி நாடகமொன்றான Neighboursஐ இரசித்து வருகிறார்கள் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? இது Ramsay Street என்ற புனைவுத் தெருவில் வசிக்கும் குடும்பங்களுக்குள் நிகழும் சம்பவங்களை மையமாக வைத்து தயாரிக்கப்படும் தொலைக்காட்சி நாடகமாகும். 1985 ஆம் ஆண்டுமுதல் கிழமை நாட்களில்
தினமும் அரைமணி நேரம் ஒளிபரப்பாகும் இந்நாடகம் சென்ற ஆண்டு வெள்ளிவிழாக் கொண்டாடியது.
ஆரம்பகாலத்தில் சானல் 7இல் ஒளிபரப்பாகிய இந்நாடகம், பின்னர் சானல்
10இல் 1986 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகின்றது. அத்துடன் உலகில் ஐம்பதுக்கு மேற்பட்ட நாடுகளிலும் ஒளிபரப்பாகிறது. ஆஸ்திரேலியாவின் இலாபகரமாக அதிகம் சம்பாதித்த ஊடக நிகழ்ச்சிகளில் Neighbours உம்
ஒன்றாகும். உங்கள் எல்லோருக்கும் அறிமுகமான ஆஸ்திரேலிய பாடகி
Kylie Minogue தன் கலைவாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் இந்நாடகத்தில்
நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்துக்கொண்டார்.

இணைப்புகள்
நாடகம் பற்றிய விபரங்கள்
http://en.wikipedia.org/wiki/Neighbours

நாடகத்தின் வலைப்பக்கம்
http://neighbours.com.au/

Saturday, January 29, 2011

மழலைகளின் உணவில் அதிக கவனம் கட்டாயமாகத் தேவை.

மழலைகள் இலகுவாக தங்களுக்கு பிடித்தமான சுவையுடய உணவுகளை அடையாளம் கண்டுவிடுகிறார்களெனவும், அத்துடன் மழலைகள் அதீதமான
கொழுப்பு, உப்பு, இனிப்பு கொண்ட தீனிகளையே விரும்புவதாகவும் அமெரிக்காவில் அண்மையில் மழலைகளையும், பெற்றோர்களையும் உள்ளடக்கி நிகழ்ந்த பரிசோதனைகளுடன் கூடிய ஆய்வொன்றின் முடிவொன்று தெரிவித்துள்ளது.

இந்த ஆராய்ச்சிகளின் முடிவுகள் மிகுந்த கவலையளிப்பதாக இருந்தாலும் குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்ததிலிருந்தே பெற்றோர்கள் குழந்தைகளின்
உடல் நலத்திற்கேற்புடைய உணவுப் பதார்த்தங்களை அதிக அக்கறையுடன் கொடுக்கவேண்டுமென வலியுறுத்துகின்றது.

இணைப்புக்கள்
செய்தி
http://www.sfgate.com/cgi-bin/article.cgi?f=/g/a/2011/01/27/prweb8095251.DTL

சுருக்கமாக ஆய்வின் விபரங்கள்
http://www.laboratoryequipment.com/News-kids-fall-for-sugary-fatty-brands-012811.aspx

சில தீர்வுகள்
http://www.i-newswire.com/preschoolers-need-to-be-taught/86534

Friday, January 28, 2011

சாம்பலிருந்து மீண்டெழுந்து வந்த நிஜக் கதாநாயகன்!!

வெள்ள அழிவால் பாதிக்கப்பட்ட Qeensland மக்களுக்கு உதவிய குட்டிபையன் மீண்டும் ஆஸ்திரேலிய மக்களின் கவனத்தைக் கவர்ந்தான். இவன் இதற்கு முன்னரும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் கெவின் ருட்டினால்
'Pind sized Hero' என வர்ணிக்கப்பட்டதால் மக்களின் கவனத்திற்குள்ளானவன்.
2009ஆம் ஆண்டு விக்டோரியா மாநிலத்தில் காட்டுத்தீயினால் ஏற்பட்ட
பேரழிவினால் பாதிக்கப்பட்டு தனது தந்தையையும் இழந்த இந்த குட்டிப்பையன்  Bailey Lackas அப்போது கைகொடுத்த Queensland மக்களுக்குத்தானும் கைமாறு செய்யவேண்டும் என்ற முனைப்போடு தனது தாயாரோடு இணைந்து  வந்து தொண்டராக பணியாற்றவிருக்கின்றான்.

இணைப்புக்கள்
1.http://m.news.com.au/NationalNews/fi659491.htm

2.Pint-Sized Hero

செய்திகளைத் தந்தவர் சாதாரணன்.
மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.

Thursday, January 27, 2011

நம்ம ரஜினி படம் ரஸ்ய மொழியிலும் டப்பாகி இருக்கிறது.

இதற்கு முதல் தமிழ்ப்படம் வெறெதுவும் டப் பண்ணியிருக்காங்களா
என்று தெரியவில்லை. நம்ம ரஜினி படம் எந்திரனை ரஸ்ய மொழியில் டப் பண்ணியுள்ளார்கள். 
இந்தப் பெருமை தமிழ்திரைப்படத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு கிடைத்த உலக அங்கிகாரம் என மகிழ்ச்சியுடன் நாம் சந்தோஷம் கொள்ளலாம். அதுவும் தமிழில் வெளிவந்த விஞ்ஞானப் புனைவுத் திரைப்படம் என்பதால் இரட்டிப்பு சந்தொஷம். ஷங்கரின் பல வருடக் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

இணைப்புக்கள்
செய்தியாகவும்
http://theblemish.com/2011/01/robot-is-fairly-ridiculous-awesome/

கருத்துக்களாகவும்
http://www.reddit.com/r/funny/comments/f8wc6/best_action_scene_ever/

செய்திகளைத் தந்தவர் சாதாரணன்.
மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.

Wednesday, January 26, 2011

சி.சி.கா2: ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு விசேட வீடியோ காட்சிகள்

ஆஸ்திரேலியாவில் பிரபலமான சில பாடல் காட்சிகளை
ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு தந்துள்ளேன் முதலில்
ஆஸ்திரேலிய பழங்குடிமக்களின் இசைக்குழுவினர் yutho yindiயின்
பாடல்களில் பிரபல்யமானதொன்றைப் பாருங்களேன்.

ஆஸ்திரேலியாவில் இரசிகர்களின் ஏகோபித்த பாடகர் John Farnham அவர்களின்
You Are Voice பாடலை அடுத்ததாகத் தந்துள்ளேன்.  இது ஆஸ்திரேலியாவின் தேசியகீதம் என்று சொல்லப்படுமளவுக்கு பிரபல்யமானது. இரசிகர்களை தனது இசையால் மயக்கி பாடவும், ஆடவும் வைத்துவிடுவார். இவர் இசைத்துறையிலிருந்து ஓய்வெடுப்பதற்கு விரும்பினாலும் இரசிகர்கள் விடுவதாயில்லை.

மேலும் சில பாடல்களை அடுத்தடுத்த நாட்களில் தருகின்றேன்.

காட்சிகளைத் தந்தவர் சாதாரணன்.
மீண்டும் அடுத்த செய்தியில் சந்திப்போம்.

ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!.

இன்று ஆஸ்திரேலியா தினம் ஆகும். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள மக்கள் எல்லோரும் தேசிய ரீதியாகக் வெகு சிறப்பாக ஆஸ்திரேலியா தினத்தைக்  கொண்டாடுகின்றனர். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும்
சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு உத்தியோகபூர்வமாக ஆஸ்திரேலிய
அரசினரால் வழங்கப்படும் அதியுயர் விருதான இவ்வருடத்திற்கான
ஆஸ்திரேலியன் (Australian of the year) விருதை விக்டோரியா மாநிலத்தை
சேர்ந்த வர்த்தகப் பிரமுகரும், சமூக சேவையாளருமான Mr.Simon McKeon பெறுகின்றார். இந்த விருது ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு முன்மாதிரியாகத்
திகழும் தலைமைத்துவமிக்க கௌரவமான குடிமகனொருவருக்கு வருடம்
தோறும் வழங்கப்படும் சிறப்பானதொரு விருதாகும்.

தெளிவான பளிங்கு நீலக்கடலால் சூழப்பட்ட, அழகான கடற்கரைகளும், தொன்மையான புராதனமிக்க பாறைகளும், மழைவனக்காடுகளும்
நிறையப்பெற்ற இயற்கைவளமிக்க ஆஸ்திரேலிய நாட்டின் குடிமகனான
நானும் ஆஸ்திரேலிய தினத்தை இன்று விமரிசையாகக் கொண்டாடுகின்றேன்.
எல்லோருக்கும் எனது அன்பு நிறைந்த ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!.
 
இணைப்புக்கள்
ஆஸ்திரேலியா தினவிபரங்கள்
http://www.australiaday.org.au/

விருதுகள் பற்றிய விபரங்கள்
http://www.australianoftheyear.org.au/

ஆஸ்திரேலியாவின் பன்முகத்தையும் இரசிக்க
http://www.australia.com/about/AboutAustralia.aspx
http://walkaboutplanner.australia.com/index.html#/trips/

Tuesday, January 25, 2011

உலகம் பஞ்சத்தை எதிர்கொள்ளாதிருக்க உடனடி நடவடிக்கை தேவை

பிரித்தானிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் பன்நாட்டு நிபுணர்கள்
குழுவினரால் கடந்த இருவருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்
முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையானது, இன்னும் இருபது வருடங்களில் உலகளவில் ஏற்படவிருக்கும் பஞ்சத்தை தடுப்பதற்கு உலக உணவுற்பத்தியில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய செயற்திட்டங்களுடனான உடனடி நடவடிக்கைகள் தேவையென வற்புறுத்தியுள்ளது.
மேலும் இவ்வறிக்கையில் இப்பஞ்சத்தை ஏற்படுத்தவிருக்கும் முக்கிய
காரணிகளாக உலக சனத்தொகை அதிகரிப்பும், மக்கள் நகரங்களை நோக்கி முண்டியடித்துக்கொண்டு குடியேறுவதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இக்காரணிகளினால் உலக மக்களின் அத்தியாவசிய தேவைகளான உணவு, குடிதண்ணீர், மற்றும் சக்தி போன்றவைகளின் வழங்கலில் ஏற்படப்போகும் பற்றாக்குறை, இப்பஞ்சத்தை உண்டாக்குமென நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
   
இருபது வருடங்களின் பின்னர்தானே எனப்பொறுத்திருக்காமல் உடனடியாக உலகநாடுகளுக்கிடையேயில் ஒருங்கிணைந்த செயற்திட்டங்கள் உலகளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளனர். முக்கியமாக உணவு வீணாவதை தடுக்கக்கூடிய, மற்றும் சிறியளவிலான உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் பெரியளவில் அறுவடையை பெற்றுக்கொள்ளக்கூடிய, வழிமுறைகள் கண்டறியப்பட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இணைப்புக்கள்
புள்ளிவிபரங்களுடனான செய்திகளை இங்கு காணலாம்.
http://www.dailymail.co.uk/sciencetech/article-1350009/Food-prices-rocket-50-global-hunger-epidemic-takes-hold.html
http://www.greenwisebusiness.co.uk/news/report-warns-of-food-shortages-without-urgent-action-2060.aspx

Sunday, January 23, 2011

விமானத்தில் இலத்திரனியல் கருவிகளை செயற்படுத்துவது மிகவும் ஆபத்தானது.

விமானப்பயணத்தின் ஆரம்பத்தில் இலத்திரனியல் கருவிகளின் செயற்பாடுகளை முற்றிலுமாக நிறுத்திவிடுமாறு விடுக்கப்படும் அறிவித்தலை பலரும் இது ஒரு வழக்கமான விஷயம்தானே என்று கவனதில் கொள்ளுவதேயில்லை. ஆனால் சமீபத்தில் நடந்த விசாரணையொன்று விமானப்பயணத்தின்போது பயணிகளின் இலத்திரனியல் கருவிகள் இடையூறுகளை உண்டாக்குவதாகக் கண்டறிந்துள்ளார்கள்.
மேலும் இது சில விமான விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக 2003ஆம் ஆண்டு நியூஸிலாந்தில்  நிகழ்ந்த எட்டுபேரை பலிகொண்ட விமான விபத்திற்கு மோபைல்போன்  இனால் ஏற்பட்ட இடையூறுதான் காரணமென நம்பப்படுகிறது.

எனவே விமானப் பயணத்தின்போது இலத்திரனியல் கருவிகள் உபயோகிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிடுங்கள்.
இணைப்புக்கள்
http://www.nytimes.com/2011/01/18/business/18devices.html
http://www.heraldsun.com.au/ipad/high-tech-danger-in-the-air/story-fn6bfmgc-1225991279563

Saturday, January 22, 2011

ஏன்னா நான் உன் நண்பேண்டா!!

இது காலம் கடந்த உறவு ஏன்னா நான் உன் நண்பேண்டா!! என்று சில வேளைகளில் விளையாட்டாக்கூட சொல்வோமல்லவா?  இனிமேல் அதை அழுத்தம் திருத்தமாக உணர்ச்சிபூர்வமாகவே நீங்கள் சொல்லலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞான பூர்வமாக கூறுகின்றார்கள். ஏனென்று பார்ப்போமா?
விஞ்ஞானிகள் ஏன் உங்களுக்கு சிலரை பார்த்தமாத்திரத்திலேயே பிடித்து விடுகின்றது என்றால் உங்களில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட ஜீன் இதில் சம்பத்தப்பட்டிருக்கிறது என்றும், அதேபோல் நீங்கள் கண்டமாத்திரதிலேயே வெறுப்பதிலும் வேறோரு குறிப்பிட்ட ஜீன் சம்பத்தபட்டிருக்கிறது என்கிறார்கள்.
இப்ப சொல்லுங்கோ உங்கள் நட்பு காலம் கடந்ததா இல்லையா?

இந்தப்பாடலைப் பார்த்துவிட்டுப் பின்னர் இணைப்புக்களில் விபரங்களைப் பாருங்களேன்.

இணைப்புக்கள்
http://www.bbc.co.uk/news/science-environment-12207954
http://news2.onlinenigeria.com/world/69652-Best-friends-forever-gene-Its-all-our-DNA-say-scientists.html

Friday, January 21, 2011

கல்லறையிலிருந்து கருவறைக்கு

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட உயிரினம் ஒன்று உயிருடன் உங்கள் முன்னால் உலா வரப்போகின்றது என்றால் நம்பமுடிகின்றதா? தற்போது ஜப்பானில் நடந்து வரும் ஆராய்ச்சி வெற்றியளிக்குமாயின் இன்னும் ஐந்து வருடங்களில் நிகழப்போகும் நிதர்சனம் இது.
 
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பனிக்கட்டிக் காலத்தில் ரஸ்யாவின் சைபீரிய வெளிகளில் வாழ்ந்த ஒருவகை யானையினம் பூமியில் ஏற்பட்ட திடீர் வெப்ப உயர்வால் முற்றிலுமாக அழிந்தது. இந்த உயிரினத்தைதான் மீண்டும் அதன் DNA மூலக்கூறுகளிலிருந்து உயிர்ப்பிக்கும் முயற்சியில் ஜப்பான் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.

மமூத் எனப்படும் இந்த உயிரினத்தின் செல்களின் DNA மூலக்கூறுகளை யானையின் வெற்றுக் கருமுட்டையினுள் செலுத்திப் பின்னர் பரிசோதனைச்சாலையில் சிலநாட்களுக்கு கருவை வளர்த்தெடுத்து யானையின் கருப்பையினுள் வைப்பதன் மூலம் உருவாகும் குட்டி முழுமைபெற குறைந்தது 600 நாட்களாவது எடுக்கும்.

இணைப்புக்கள்.
http://theweek.com/article/index/211207/cloning-the-woolly-mammoth-a-worrying-precedent

பழைய செய்தியெனினும் விரிவாக ஆராய்ந்துள்ளது.
http://news.nationalgeographic.com/news/2005/04/0408_050408_woollymammoth.html