பிரித்தானிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் பன்நாட்டு நிபுணர்கள்
குழுவினரால் கடந்த இருவருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்
முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையானது, இன்னும் இருபது வருடங்களில் உலகளவில் ஏற்படவிருக்கும் பஞ்சத்தை தடுப்பதற்கு உலக உணவுற்பத்தியில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய செயற்திட்டங்களுடனான உடனடி நடவடிக்கைகள் தேவையென வற்புறுத்தியுள்ளது.
மேலும் இவ்வறிக்கையில் இப்பஞ்சத்தை ஏற்படுத்தவிருக்கும் முக்கிய
காரணிகளாக உலக சனத்தொகை அதிகரிப்பும், மக்கள் நகரங்களை நோக்கி முண்டியடித்துக்கொண்டு குடியேறுவதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இக்காரணிகளினால் உலக மக்களின் அத்தியாவசிய தேவைகளான உணவு, குடிதண்ணீர், மற்றும் சக்தி போன்றவைகளின் வழங்கலில் ஏற்படப்போகும் பற்றாக்குறை, இப்பஞ்சத்தை உண்டாக்குமென நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
இருபது வருடங்களின் பின்னர்தானே எனப்பொறுத்திருக்காமல் உடனடியாக உலகநாடுகளுக்கிடையேயில் ஒருங்கிணைந்த செயற்திட்டங்கள் உலகளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளனர். முக்கியமாக உணவு வீணாவதை தடுக்கக்கூடிய, மற்றும் சிறியளவிலான உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் பெரியளவில் அறுவடையை பெற்றுக்கொள்ளக்கூடிய, வழிமுறைகள் கண்டறியப்பட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.
இணைப்புக்கள்
புள்ளிவிபரங்களுடனான செய்திகளை இங்கு காணலாம்.
http://www.dailymail.co.uk/sciencetech/article-1350009/Food-prices-rocket-50-global-hunger-epidemic-takes-hold.html
http://www.greenwisebusiness.co.uk/news/report-warns-of-food-shortages-without-urgent-action-2060.aspx
No comments:
Post a Comment