Tuesday, February 1, 2011

25 ஆண்டுகளுக்கு மேலாக தினமும் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகம்.

ஒன்றல்ல, இரண்டல்ல,இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக தினமும் ஆஸ்திரேலியாவில் எல்லோரும் விருப்பத்துடன் குடும்பத் தொலைக்காட்சி நாடகமொன்றான Neighboursஐ இரசித்து வருகிறார்கள் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? இது Ramsay Street என்ற புனைவுத் தெருவில் வசிக்கும் குடும்பங்களுக்குள் நிகழும் சம்பவங்களை மையமாக வைத்து தயாரிக்கப்படும் தொலைக்காட்சி நாடகமாகும். 1985 ஆம் ஆண்டுமுதல் கிழமை நாட்களில்
தினமும் அரைமணி நேரம் ஒளிபரப்பாகும் இந்நாடகம் சென்ற ஆண்டு வெள்ளிவிழாக் கொண்டாடியது.
ஆரம்பகாலத்தில் சானல் 7இல் ஒளிபரப்பாகிய இந்நாடகம், பின்னர் சானல்
10இல் 1986 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகின்றது. அத்துடன் உலகில் ஐம்பதுக்கு மேற்பட்ட நாடுகளிலும் ஒளிபரப்பாகிறது. ஆஸ்திரேலியாவின் இலாபகரமாக அதிகம் சம்பாதித்த ஊடக நிகழ்ச்சிகளில் Neighbours உம்
ஒன்றாகும். உங்கள் எல்லோருக்கும் அறிமுகமான ஆஸ்திரேலிய பாடகி
Kylie Minogue தன் கலைவாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் இந்நாடகத்தில்
நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்துக்கொண்டார்.

இணைப்புகள்
நாடகம் பற்றிய விபரங்கள்
http://en.wikipedia.org/wiki/Neighbours

நாடகத்தின் வலைப்பக்கம்
http://neighbours.com.au/

1 comment:

துளசி கோபால் said...

ஒரு காலத்துலே நெய்பர்ஸ் பாக்கலைன்னா என் தலையே வெடிச்சுடுமுன்னு இருந்தேன். அந்தப் பைத்தியத்துலே இருந்து எப்படி விடுபட்டேன் என்பதை ஒரு பதிவாகத்தான் எழுதணும்:-)

kylie minogue எல்லாம் அப்போ டீன் ஏஜ்பசங்க. ராம்ஸே ஸ்ட்ரீட்லே ஏகப்பட்ட ஆட்கள் மாறி மாறிவந்து போய்க்கிட்டே இருப்பாங்க

Post a Comment