சமீபத்தில் நடந்த பிலிம்பேர் விழாவில் இளமை துள்ளியது என்றால் அதில் மிகையில்லை. இதில் பெரும்பங்கு நிகழ்ச்சியைத் நல்ல நகைச்சுவையுணர்வோடு தொகுத்தளித்த இளம் நடிகர்களான Imran Khan, Ranbir Shingh, இருவரையுமே சேரும். விழாவிலிருந்து மூன்று வீடியோக் காட்சிகளைத் தந்துள்ளேன்.
இசையால் வசையாகாத இதயம் எது என்பதை நிருபிக்கும் விதத்தில்
இந்த பகுதியை வழங்கிய Sonu Nigam எல்லோர் மனதையும் இசையால்
கவர்ந்து சென்றார்.
கனவுலகத் தொழிற்சாலை எத்தனையோ சினிமாக்களில் இரசிகர்களை
கால இயந்திரத்தில் பயணிக்க வைத்துள்ளது. ஆனால் இந்த நிகழ்ச்சி
நிஜமாகவே இரசிகர்களை பயணிக்க வைத்தது.
ஒரு பாட்டுக்கு இசை முக்கியமா இல்லை கவிதை முக்கியமா? இல்லையில்லை காதல்தான் முக்கியம் என்கிறது இந்தப்பாடல். சென்னையே கொண்டாடிய இந்தப் பாடலைப் பார்த்துவிட்டு சொல்லுங்கள் உண்மையா இல்லையா என்று.
காதல் வந்தால் எல்லாமே மறந்து போய்விடும் என்பதை வெகுளித்தனமாக புரியவைத்து எல்லோர் மனதையும் கொள்ளைகொண்ட மற்றுமோர் நல்ல பாடல்.
திருமணத்திற்கு முன் காதலிப்பவர்களுக்கும், திருமணத்திற்குப்பின் மனைவியைக் காதலிப்பவர்களுக்கும் என் அன்பான காதலர்தின வாழ்த்துக்கள்.
நீங்கள் கேள்விப்பட்டீர்களோ தெரியாது. ஆஸ்திரேலியாவின் பிரபலமான இசைக்குழுக்களிலொன்று Mid Night Oil. இவர்கள் சுற்றுப்புறச் சூழலிலும்,
மனித உரிமை தொடர்பான விடயங்களிலும் மிகவும் அக்கறை கொண்டவர்கள். இவர்களின் பாடல்களும் அவற்றையே பிரதிபலிக்கின்றன.
Mid Night Oil இசைக்குழுவின் பிரதான பாடகர் Peter Garrett இன்று ஆட்சியிலிருக்கும் தொழிற்கட்சியின் அமைச்சர்களில் ஒருவர். இசைக்குழுவிலிருந்தபோது காட்டிய துடிப்பை (அவர் ஆட்டத்தைப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும்) அமைச்சராக செயற்படும்போது காட்டுவதேயில்லை என்ற காட்டமான விமர்சனமும் இவர்மீது உண்டு.
இனிப்பாடல்களைப் பாருங்களேன். பாடல் வரிகளையும் இத்துடன் இணைத்துள்ளேன்.
இதற்கு முதல் தமிழ்ப்படம் வெறெதுவும் டப் பண்ணியிருக்காங்களா
என்று தெரியவில்லை. நம்ம ரஜினி படம் எந்திரனை ரஸ்ய மொழியில் டப் பண்ணியுள்ளார்கள்.
இந்தப் பெருமை தமிழ்திரைப்படத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு கிடைத்த உலக அங்கிகாரம் என மகிழ்ச்சியுடன் நாம் சந்தோஷம் கொள்ளலாம். அதுவும் தமிழில் வெளிவந்த விஞ்ஞானப் புனைவுத் திரைப்படம் என்பதால் இரட்டிப்பு சந்தொஷம். ஷங்கரின் பல வருடக் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
ஆஸ்திரேலியாவில் இரசிகர்களின் ஏகோபித்த பாடகர் John Farnham அவர்களின்
You Are Voice பாடலை அடுத்ததாகத் தந்துள்ளேன். இது ஆஸ்திரேலியாவின் தேசியகீதம் என்று சொல்லப்படுமளவுக்கு பிரபல்யமானது. இரசிகர்களை தனது இசையால் மயக்கி பாடவும், ஆடவும் வைத்துவிடுவார். இவர் இசைத்துறையிலிருந்து ஓய்வெடுப்பதற்கு விரும்பினாலும் இரசிகர்கள் விடுவதாயில்லை.
கோடம்பாக்கத்தின் செட்டுக்களுக்குள் குதிரை ஓட்டிக்கொண்டு வீரவசனங்கள் பேசிய நம்ம ஹீரோக்கள், மதுரையின் சந்துபொந்துகளுக்குள் சேவல்களுடன் கதை பேசுமளவுக்கு இயக்குனர்களின் செல்லப்பிள்ளைகள் ஆகிவிட்டார்கள். புலத்திலும் தமிழ்படத்தின் சாயலிருந்து விலகி சொந்தக்கதையைப் பேசியிருக்கிறது 1999.
தமிழ்ப்படத்தின் பொற்காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அது மிகையல்ல உண்மை. ஹீரோக்கள் விம்பங்களை உடைத்து சாதாரணர்களாக இயக்குனர்களின் தயவில் வித்தியாசமான களங்களில் வாழத்தலைப்பட்டு விட்டார்கள். தொழில்நுட்பத்தினரும் சினிமாவின் எல்லாத் துறைகளிலும் கொடிகட்டிப் பறக்கிறார்கள். தமிழ்படங்களுக்கு உலகத் திரைப்பட விழாக்களில் விருது என்பது ஆஸ்கார் உட்பட எட்டிய கனியாகிவிட்டது.
புலத்திலும் இதனை மெய்ப்பிக்கும் வண்ணம், சென்ற ஆண்டில் கனடாவில் வெளிவந்திருக்கும் படம்தான் 1999. இது பல உலகத் திரைப்பட விழாக்களிலும் பங்குகொண்டுள்ளதுடன் விருதுகளையும் பெற்றுள்ளது.
புலத்திலிருந்து இனிமேல் வரவிருக்கும் தமிழ்ப்படங்கள் உலகத் தரத்தையும் விஞ்சியிருக்கும் என்பதற்கு ஒரு நல்ல ஆரம்பம் 1999.
பொதுவாகவே ஆண்களுக்கும், பெண்களுக்கும் பெரும் கவலையைத் தருகிற பிரச்சனைகளிலொன்று முடி உதிருதல். அதற்கு தற்போதய சிகிச்சை முறைகள் முடி உதிருதலை தடுப்பததுடன், உள்ள முடியைப் பாதுகாப்பாக பேணுகின்றன. ஆனால் புதிதாக முடிகளை உருவாக்குவதில்லை.
சமீபத்தில் பென்சிலவேனியா பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறைப் பேராசிரியர் Dr. George Cotsarelis தலைமையிலான குழுவினர் முடியுதிருதல் என்ற குளறுபடிக்குக் காரணமான ஸ்டெம்செல்லைக் கண்டறிந்துள்ளனர். இதன்மூலம் புதிதாக முடிகளை உருவாக்கக் கூடிய சிகிச்சைமுறைகளை கண்டறிவதற்கு பெரியளவில் வழியேற்படுமென அறியப்படுகின்றது.
இப்ப சொல்லுங்க, எதிர்காலத்தில் ரஜனியின் தோற்றம் மாறிடும்தானே.
ரஜனி சிகிச்சைக்கு ஒத்துக்குவரா? அவர்தான் சாமியாராச்சே!
செய்திக்குத் தொடர்பான இணைப்புக்களில் ரொம்ப விவரமாவே எல்லாம் சொல்லியிருக்காங்க. நேரமிருக்கும்போது பாருங்க.